புதன், 15 ஜூலை, 2015

கல்வி வளர்ச்சி நாள் விழா......




இன்று 15.07.2015 புதன்கிழமை எமது பள்ளியில் கர்ம வீரர் காமராசர் பிறந்த தினம் கல்வி வளர்ச்சி நாள்  விழாவாகக் கொண்டாடப்பட்டது.

முன்னதாக பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் கல்விக்கு கண் கொடுத்தவரும், கர்மவீரர் எனப் போற்றப்பட்டவருமான தமிழக முன்னாள் முதல் அமைச்சர் திரு கு. காமராஜ் அவர்களைப் பற்றிய பல அரிய செய்திகளையும் அவரின் சாதனையும் கூறி  அனைவரையும் வரவேற்றார். விழாவிற்கு ஊத்தங்கரை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திரு இர. பிரசாத் அவர்கள் தலைமை தாங்கினார். அவர் தமது தலைமை உரையில் கல்வி வளர்ச்சி நாள் விழாவின் அவசியம் மற்றும் இவ்விழா கொண்டாடப்படுவதன் காரணம் ஆகியவை குறித்தும், திரு கு. காமராசர் அவர்களை பற்றியும் விரிவாக பேசியதோடு அனைவரும் தரமான கல்வியை கற்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
விழாவில் ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இளைஞர் செஞ்சிலுவைச் சங்க பொருப்பாசிரியர் திரு கு. கணேசன் அவர்கள் கலந்துக்கொண்டு வாழ்த்துரை வழங்கியதோடு மாணவர்களுக்கான பரிசுப்பொருட்களை தமது சொந்த செலவில் வழங்கினார்.
பின்னர் மாணவர்கள் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்படுவதற்கு காரணமான திரு காமராசர் தொடர்பான தமிழ்/ஆங்கில பேச்சு, கவிதை மற்றும் பாடல்கள் மூலம் தமது திறமைகளை வெளிப்படுத்தினர்.

அதன்பின் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில்  ஒன்றிய அளவில் நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் முதலிடம் பெற்ற மாணவர் நா. தினேஷ், குறுவள மைய அளவில் நடைபெற்ற சதுரங்க போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் வே. சர்மிளா, பெ. கலையரசி, மு. இளவரசன் மற்றும் கடந்த கல்வி ஆண்டில் பள்ளிக்கு 100% வருகை புரிந்த மாணவர்கள் ச. இனியா, சு. அர்ச்சனா, மு. சுரேந்தர், ச. நந்தினி  ஆகியோருக்கும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற  மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் திருமதி அ. நர்மதா  அனைவருக்கும் நன்றி கூறினார்.
விழாவில் உதவி ஆசிரியர்கள் திருமதி த. லதா, திரு. வே. வஜ்ஜிரவேல் ஆகியோரும் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திருமதி சி. இராஜேஸ்வரி, கிராமக் கல்விக் குழுத் தலைவர் திரு த. பூபதி, பள்ளி மேலாண்மைக் குழு துணைத்தலைவர் திருமதி பூ. பரமேஸ்வரி உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டனர்.
































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக