செவ்வாய், 7 ஜூலை, 2015

ஊத்தங்கரை ஒன்றிய அளவிலான சதுரங்கப் போட்டிகள்



இன்று 07.07.2015 செவ்வாய்க்கிழமை ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில்  ஒன்றிய அளவிலான சதுரங்கப் போட்டிகள் நடைபெற்றது.
முன்னதாக போட்டிகளை  ஊத்தங்கரை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திரு இர. பிரசாத் அவர்கள் ஆண்கள் போட்டியையும், கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திருமதி த. மகேஸ்வரி அவர்கள் பெண்கள் போட்டியையும் துவக்கி வைத்தனர். கெங்கபிராம்பட்டி மைய ஒருங்கிணைப்பாளரும், ஜோதிநகர் பள்ளித் தலைமை ஆசிரியருமான திரு செ. இராஜேந்திரன் அவர்கள் போட்டிக்கான விதிமுறைகளை  எடுத்துக்கூறி அனைவரும் சிறப்பாக விளையாடி வெற்றி பெறவேண்டுமென கேட்டுக்கொண்டார்.
பின்னர் பள்ளி மாணவர்கள் 1 முதல் 5 வகுப்புகள் வரையில் ஒரு பிரிவாகவும் 6 முதல் 8 வகுப்புகள் வரையில் ஒரு பிரிவாகவும் பிரிக்கப்பட்டு அதில் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியே போட்டிகள் நடத்தப்பட்டது. அப்போது மாணவர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்தி சிறப்பாக விளையாடினர்.
நான்கு சுற்று போட்டிகளுக்குப் பின் கீழ்க்கண்ட  மாணவர்கள் முதல் மூன்று இடங்களுக்கு தேர்வு செய்யப்பபட்டனர்.

1 முதல் 5 வகுப்புப் பிரிவு :
                  ஆண்கள்                  பெண்கள்
முதலிடம் :        கே.சத்தியமூர்த்தி     எம்.சைலஜா
                         சின்னகுன்னத்தூர்            எம்.வெள்ளாளப்பட்டி
இரண்டாமிடம்:     பி. பிரபு              எம். ரூபஸ்ரீ
                         எம்.வெள்ளாளப்பட்டி         கல்லாவி
மூன்றாமிடம்:      எஸ்.சக்தி             எஸ். சத்யா
                         முசிலிக்கொட்டாய்                          படப்பள்ளி

6 முதல் 8 வகுப்புப் பிரிவு :

முதலிடம் :        நா. தினேஷ்          டி. இலக்கியா
                         ஜோதிநகர்                  நாப்பிராம்பட்டி
இரண்டாமிடம்:     டி. தமிழரசன்         பி. பவித்தரா
                         இலக்கம்பட்டி காலணி        செங்கழுநீர்பட்டி
மூன்றாமிடம்:      ஆர். கவியரசு         கே. கௌசல்யா
                          புங்கனை                   முசிலிக்கொட்டாய்

அதன் பின்னர் போடிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
விழாவில் ஊத்தங்கரை ஒன்றியத்தில் உள்ள 13 குறுவள மையங்களில் நடைபெற்ற போட்டிகளில் முதலிடம் பெற்ற அனைத்து மாணவர்களும் ஒருங்கிணைப்பாளர்கள் ஊத்தங்கரை மா. கிருஷ்ணமூர்த்தி, வெங்கடதாம்பட்டி செ. வெங்கடேசன், அனுமந்தீர்த்தம் கி. ஞானசேகரன், காரப்பட்டு, மா. ஜோதி, என். வெள்ளாளப்பட்டி பி.மலர்,  உள்ளிட்ட அப்பள்ளிகளின் ஆசிரியர்களும் தலைமை ஆசிரியர்களும் கலந்துக்கொண்டனர்.



































1 கருத்து: