பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம்
இன்று 10.07.201 – ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர்
கழகக் கூட்டம் நடைபெற்றது.
முன்னதாக பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள்
அனைவரையும் வரவேற்றார். அப்போது அவர் தமது
உரையில் ,தற்போதைய பள்ளியின்
வளர்ச்சி நிலைகள் மற்றும் கல்வித் தரத்தில் மாணவர்களின் முன்னேற்றம், பள்ளியில் செயல்படுத்தி
வரும் பாடம்சாரா கூடுதல் செயல்பாடுகளான பள்ளிச் சுற்றுச் சூழல் மன்றம், இளைஞர் செஞ்சிலுவைச்
சங்கம், தமிழ் இலக்கிய மன்றம், கணிதம், அறிவியல் மன்றச் செயல்பாடுகள் பற்றியும் விரிவாக
எடுத்துக் கூறினார் மேலும் பள்ளியில் அளித்துவரும் மாணவர்களுக்கான கணினிப் பயிற்சியும்,
கணினி மற்றும் பெருந்திரைக் காட்சி மூலம் கற்பித்தலும்
இதனை அனைத்து பெற்றோர்களும் ஏற்று ஒப்புதல்
அளித்தது மிகுந்த மன நிறைவை அளித்தது. ..
பின்னர் பள்ளி பெற்றோர் ஆசிரியர்
கழகத்திற்கு புதிய பொறுப்பாளர்கள்
தேர்வு நடைபெற்றது. அதில் கீழ்க்கண்டவர்கள் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டனர்.
தலைவர் : திருமதி சி. இராஜேஸ்வரி
து. தலைவர் : திரு
மு. அம்பிகா
செயலாளர் : திரு
செ. இராஜேந்திரன் (தலைமைஆசிரியர்)
து.
செயலாளர் : திருமதி மு. இலட்சுமி (உதவி ஆசிரியர்)
பொருளாளர் : திரு
கு. வேலுமணி
கூட்டத்தில் பள்ளி
மேலாண்மைக் குழுத் தலைவர் திருமதி பூ. கணகராணி, இரா. சத்யா, கீதா, பூ. பரமேஷ்வரி, உள்ளிட்ட
அனைத்து பெற்றோர்களும் கலந்துக்கொண்டனர்.
இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் திரு வே. வஜ்ஜிரவேல் நன்றி கூறினார்.
கூட்டத்திற்கான
ஏற்பாடுகளை உதவி ஆசிரியர்கள் திருமதி மு.இலட்சுமி, திரு
இரா. முரளி, திரு. தீ. சிவராமன்,
திருமதி அ. நர்மதா ஆகியோர் செய்திருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக