வெள்ளி, 6 செப்டம்பர், 2019

ஆசிரியர் தினவிழா - 2019


இன்று 05.09.2019  ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி தமிழ் இலக்கிய மன்றம் சார்பில் ஆசிரியர் தினவிழா  நடைபெற்றது.
     பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில், முன்னதாக  பள்ளி உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி அனைவரையும் வரவேற்றார். பின்னர் பேசிய பள்ளித் தலைமை ஆசிரியர் தனது தலைமை உரையில் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படும் முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் டாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்தநாள், ஆசிரியர் தினவிழாவாக கொண்டாடுவது பற்றி எடுத்துக் கூறி அவரின் வாழ்க்கை, தத்துவங்கள், நாட்டுக்கு அவர் செய்த்த கல்விச் சேவைகள் பற்றியும் எடுத்துக் கூறினார்.
அடுத்து பள்ளி மாணவர்கள்  ஆசிரியர் தினவிழா தொடர்பாக  எனக்குப் பிடித்த ஆசிரியர் என்ற தலைப்பில் தமது ஆசிரியர்களை பற்றி கருத்துக்களை பேச்சு, கவிதை மூலம் வெளிப்படுத்தினர்.
பின்னர் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின சிறப்பு பரிசுகள் பள்ளித் தலைமை ஆசிரியரால் வழங்கப்பட்டது.
விழாவில் உதவி ஆசிரியர் ஜி.எம். சிவக்குமார் வாழ்த்துரை வழங்கினார். இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் திருமதி வே. இராஜ்குமார் அனைவருக்கும் நன்றி கூறினார்.   
















































வெள்ளி, 2 ஆகஸ்ட், 2019

கெங்கபிராம்பட்டி குறுவளமைய அளவிலான சதுரங்கப்போட்டிகள் – 2019



இன்று 02.08.2019 வெள்ளிக்கிழமை கெங்கபிராம்பட்டி குறுவளமைய அளவிலான சதுரங்கப்போட்டிகள் நடைபெற்றது.
முன்னதாக போட்டிகளை மைய ஒருங்கிணைப்பாளரும், ஜோதிநகர் பள்ளித் தலைமை ஆசிரியருமான திரு செ. இராஜேந்திரன் அவர்கள் பள்ளி மாணவர்களுக்கு சதுரங்க போட்டிகள் நடத்துவதன் அவசியம் பற்றியும் மாணவர்களின் திறன் வெளிப்பாட்டிற்கு இப்போட்டிகள் எவ்வாறு பயன்படுகிறது என்பது பற்றியும் விரிவாக எடுத்துக்கூறியும், போட்டிக்கான விதிமுறைகளை எடுத்துக் கூறியும் போட்டிகளைத் துவக்கிவைத்தார்
பின்னர் பள்ளி மாணவர்கள் 1 முதல் 5 வகுப்புகள் வரையில் ஒரு பிரிவாகவும் 6 முதல் 8 வகுப்புகள் வரையில் ஒரு பிரிவாகவும் பிரிக்கப்பட்டு அவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டது. அப்போது மாணவர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்தினர்.
நான்கு சுற்று போட்டிகளுக்குப்பின் கீழ்க்கண்ட மாணவர்கள் முதல் இரண்டு இடங்களுக்கு தேர்வு செய்யப்பபட்டனர்.

3 முதல் 5 வகுப்புப் பிரிவு :
               
முதலிடம்      :     எஸ். குமரன்         பி.அனுஸ்ரீ
                     பேயனூர்                   நாப்பிராம்பட்டி
இரண்டாமிடம்  :     ஜெ. சஞ்சய்          எஸ். ஆராதனா
                     ஜோதிநகர்                  ஜோதிநகர்

6 முதல் 8 வகுப்புப் பிரிவு :

ஆண்கள்              பெண்கள்

முதலிடம்      :     எஸ். சக்தி           வி. ஹரிதர்ஷினி
                     நாப்பிராம்பட்டி              நாப்பிராம்பட்டி
இரண்டாமிடம்  :     எஸ். விக்னேஷ்      எஸ். தாமரைச் செல்வி
                     கொண்டம்பட்டி             கொண்டம்பட்டி


அதன் பின்னர் போடிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் கெங்கபிராம்பட்டி பள்ளித்தலைமை ஆசிரியர் திரு பி. பொன்முடி உள்ளிட்ட கெங்கபிராம்பட்டி மையத்தைச் சார்ந்த ஜோதிநகர், உப்பாரப்பட்டி, கொண்டம்பட்டி, நாப்பிராம்பட்டி, பேயனூர், ஆகிய பள்ளிகளின் ஆசிரியர்கள் பலரும் கலந்துக்கொண்டனர்.