வியாழன், 7 ஏப்ரல், 2016

உலக சுகாதாரநாள் விழா - 2016


இன்று 07.04.2016ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி உடல் நலச் சங்கம் சார்பில் உலக சுகாதாரநாள் விழா  நடைபெற்றது.
     பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில், முன்னதாக  பள்ளி உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி அனைவரையும் வரவேற்றார். பின்னர் பேசிய பள்ளித் தலைமை ஆசிரியர் தனது தலைமை உரையில் இன்று உலகம் முழுவதும் மக்களின் சுகாதார விழிப்புணர்வுக்காக உலக சுகாதாரநாள் விழா பற்றி எடுத்துக் கூறியதோடு நாம் நமது உடலை எவ்வாறு சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும் எனவும், அதற்கு மேற்கொள்ள வேண்டிட நடவடிக்கைகள் பற்றியும், நாம் உண்ண வேண்டிய சத்துள்ள உணவின் அவசியம் பற்றியும் எடுத்துக்கூறினார்.
அடுத்து பள்ளி மாணவர்கள்  உலக சுகாதார நாள் தொடர்பாக தமது கருத்துக்களை பேச்சு, கவிதை மூலம் வெளிப்படுத்தினர்.
பின்னர் பள்ளி உடல் நலச் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட கட்டுரை, கவிதை, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், விழாவில் பங்கேற்ற மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்ட்து.
விழாவிற்கான ஏற்பாடுகளை உதவி ஆசிரியர்கள் திருமதி சு. ந. திலகா, த. லதா ஆகியோர் செய்திருந்தனர். இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் திரு வே. வஜ்ஜிரவேல்  நன்றி கூறினார்.  


















செவ்வாய், 22 மார்ச், 2016

உலக வனநாள் விழா 2016



ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (21.03.2016) ”உலக வனநாள் விழா மற்றும் உலக நீர்நாள் விழா” கொண்டாடப்பட்டது.
பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ.இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் முன்னதாக பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியரும் சுற்றுச் சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளருமான திருமதி மு. இலட்சுமி அனைவரையும் வரவேற்றார்.
பள்ளித் தலைமை ஆசிரியர் தமது தலைமை உரையில் உலக வனநாள் மற்றும் உலக நீர்நாள் தொடர்பாக கருத்துக்களையும் அவை கொண்டாடப்படுவதன் அவசியம் குறித்தும் விரிவாக விளக்கினார். மேலும் காடுகள்  எவ்வகையில் மனித குலத்திற்கு பயன் தருகிறது என்பது குறித்தும் தெளிவாக விளக்கினார்.
விழாவில் உலக வனநாள் தொடர்பான பேச்சுப் போட்டியில் ஒன்றிய அளவில் இரண்டாமிடம் பிடித்த மாணவன் நா. தினேஷ், ஓவியப் போட்டியில் இரண்டாமிடம் பிடித்த மாணவன் பூ. தமிழரசன் ஆகியோருக்கு பரிசும், பாராட்டுச் சான்றுகளும் வழங்கப்பட்டது. தொடர்ந்து போட்டிகளில் கலந்துக்கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
பின்னர் பள்ளியில் உலக வனநாள் நினைவாக மரக் கன்றுகள் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மூலம் நடப்பட்டது.
பள்ளி உதவி ஆசிரியர்கள் ந. திலகா, த. லதா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இறிதியில் உதவி ஆசிரியர் திரு வே, வஜ்ஜிரவேல் அனைவருக்கும் நன்றி கூறினார்.