திங்கள், 5 அக்டோபர், 2015

இரண்டாம் பருவ விலையில்லா கற்றல் பொருட்கள் வழங்கும் விழா




ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (05.10.2015) மாணவர்களுக்கு விலையில்லா பாடநூல்கள், பாடக்குறிப்பேடுகள் மற்றும் சீருடை வழங்கும் விழா நடைபெற்றது.
 விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமை தாங்கினார். அப்போது அரசால் மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா கற்றல் பொருட்களைப் பயன்படுத்திக்கொண்டு அனைத்து மாணவர்களும் சிறப்பாக கள்வி கற்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.  
முதல் பருவ விடுமுறை முடிந்து இன்று பள்ளிக்கு வந்த மாணவர்கள் அனைவருக்கும் இன்றே அனைத்து பாட நூல்களும், பாடக்குறிப்பேடுகளும் வழங்கப்பட்டதால் அனைவரும் மிக்க மகிழ்வடைந்தனர்.  
. விழாவிற்கான ஏற்பாடுகளை உதவி ஆசிரியர்கள், திருமதி மு. இலட்சுமி, திருமதி த. லதா, திருமதி நா. திலகா, திரு வே. வஜ்ஜிரவேலு ஆகியோர் செய்திருந்தனர். 



















வியாழன், 24 செப்டம்பர், 2015

மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் சந்திப்பு........

             கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு மாவட்டக் கல்வி அலுவலராக மாறுதல் மூலம் வந்து பணியேற்றுள்ள மதிப்புமிகு பாபு அவர்களை கிருஷ்ணகிரி மாவட்ட தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் மாவட்டத் தலைவர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில், மாவட்டச் செயலாளர் திரு ம. பவுன்துரை, மாவட்ட தலைமை நிலையச் செயலாளர் திரு து. மனுநீதி, மாவட்டப் பொருளாளர் திரு நவீத்அக்பர் உள்ளிட்ட மாவட்டப் பொருப்பாளர்களும், அனைத்து வட்டாரப் பொருப்பாளர்களும் சந்தித்தனர். அப்போது  மாவட்டக் கல்வி அலுவலர் அவர்கள் அனைவரையும் மிகுந்த ஆர்வத்தோடும், அன்போடும் வரவேற்றமை அனைவருக்கும் மகிழ்வைத் தந்தது.
           சந்திப்பின் போது புதிய மாவட்டத்தொடக்கக் கல்வி அலுவலருக்கு தமிழக ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி மாவட்டக் கிளை சார்பில் வரவேற்பையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டனர்.
     அப்போது மாவட்ட தொடக்கக் கல்வி வளர்ச்சியில் இயக்க பொருப்பாளர்களும், இயக்க ஆசிரியர்களும் தொடர்ந்து சிறப்பாக பங்காற்றுவார்கள் எனவும் இதற்கு சாட்சி இவ்வியக்கத்தில் உள்ளோர் அதிக அளவில் கல்வித்துறையின் மாநில, மாவட்ட விருதுகளைப் பெற்று இருப்பதே ஆகும் எனச் சுட்டிக்காட்டினார்கள். 
       தொடர்ந்து தாங்களும் எமது ஆசிரியர்களின் தேவைகள் மற்றும், எதிர்பார்ப்புகளை விரைந்து முடித்து தரவேண்டுமெனக் கேட்டுக் கொண்டு, அது தொடர்பாக தங்களோடு அடிக்கடி அலைபேசி வழியே அன்புத் தொல்லை கொடுப்போம் எனக் கூறிய போது, மாவட்டத்தொடக்கக் கல்வி அலுவலர் அவர்கள் தமக்கே உரிய பாணியில் பேசுங்கள், ஆனால் பள்லி நேரத்தில் வேண்டாம் எனக் கூறியமை, பள்ளியில் கற்றல்/கற்பித்தல் பணி எவ்விதத்திலும் பாதித்துவிடக்கூடாது என்பதில் அவருக்கு உள்ள அக்கறையை உணர முடிந்தது. அவரின் எதிர்பார்ப்பிற்கேற்ப கல்விப் பணி பாதிக்காத வகையிலேயே    தங்களோடு தொடர்பு கொள்வோம் என்ற உறுதி அளித்தனர்.













புதன், 16 செப்டம்பர், 2015

உலக ஓசோன் விழிப்புணர்வு நாள் விழா



இன்று 16.09.2015 வெள்ளிக்கிழமை எமது பள்ளியில் பள்ளி சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் உலக ஓசோன் விழிப்புணர்வு நாள்  விழா  பசுமை விழா”வாகக் கொண்டாடப்பட்டது.

முன்னதாக காலையில் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களால் நடப்பட்டது.

பின்னர் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில், பள்ளி சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளரும், அறிவியல் பட்டதாரி ஆசிரியருமான திருமதி மு. இலட்சுமி அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.  பள்ளித் தலைமை ஆசிரியர் தமது தலைமை உரையில் இன்று அகில உலகம் முழுமையும் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் உலக ஓசோன் நாள்  விழா கொண்டாடப்படுவது குறித்தும், அதற்கு காரணம் இன்றைய சுற்றுச்சூழலைக் காப்பது நமது அனைவரின் கடமை என்பது குறித்தும் விரிவாக பேசியதோடு அனைவரும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பெறுவதோடு அதற்கான சரியான செயல் திட்டங்களை செயல்படுத்திட முன்வர  வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். அதன் அடிப்படையில்தான் நமது பள்ளியில் தற்போது இவ்விழா பசுமை விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது எனவும் கூறினார்.
பின்னர் மாணவர்கள் ஓசோன் தொடர்பான பேச்சு, கட்டுரை, கவிதை, பாடல் மற்றும் ஓவியப் போட்டிகளில் தமது திறமைகளை வெளிப்படுத்தினர்.
அதன் பின்னர் போடிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் உதவி ஆசிரியர்கள் திருமதி த. இலதா, திருமதி நா. திலகா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

                இறுதியில் எட்டாம் வகுப்பு மாணவர் நா. தினேஷ் அனைவருக்கும் நன்றி கூறினார்.