புதன், 21 பிப்ரவரி, 2024

தமிழ்மாமணி விருது......

ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கவி. செங்குட்டுவன் எனும் செ. இராஜேந்திரன் அவர்களுக்கு 'உலகத் தாய்மொழி நாள் விழா'வில் "தமிழ்மாமணி" விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. திருச்சி நந்தவனம் அறக்கட்டளை சார்பில், திருச்சி பிரீஸ் ரெசிடென்சியில் நடைபெற்ற உலக தாய்மொழி நாள் விழாவில் ஊத்தங்கரை கவி. செங்குட்டுவன் அவர்களது உலகலாவிய தமிழ்ப் பணியைப் பாராட்டி "தமிழ்மாமணி" எனும் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. மேஜர் டோனர் கே. சீனிவாசன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், அறக்கட்டளை தலைவர் நந்தவனம் சந்திரசேகரன் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக தஞ்சாவூர் யோகம் ரியல் எஸ்டேட் நிருவாக இயக்குநர் இரா. செழியன், திருச்சி நவநீதா பில்டர்ஸ் நிருவாக இயக்குநர் பி. சுரேஷ் நவநீதா, மாவட்ட ரோட்டரி ஆளுனர் கார்த்திக் ஆகியோர் கலந்துக் கொண்டனர். பேராசிரியர் மீ. சந்திரசேகரன் அவர்கள் தமிழின் தொன்மை வரலாறு பற்றியும், பழந் தமிழர்களின் பண்பாட்டு விழுமியங்கள் குறித்தும் சிறப்புரை ஆற்றினார். ப. தனபால் அனைவருக்கும் நன்றி கூறினார். நிகழ்வில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தமிழறிஞர்களும், தமிழார்வலர்களும் வந்து பங்கேற்றனர்.

புதன், 7 பிப்ரவரி, 2024

பள்ளி ஆண்டுவிழா - 2024

ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (07.02.2024) பள்ளி ஆண்டு விழா மற்றும் அரசு பல்தொழிற் நுட்பக் கல்லூரி நாட்டு நலத்திட்ட முகாமின் நிறைவு விழா உள்ளிட்ட இருபெரும் விழாக்கள் மிகச் சிறப்பாக நடைபெற்றது. ஊதங்கரை வட்டாரக் கல்வி அலுவலர் திரு ச. லோகேஷா அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில், பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். அவர் தனது வரவேற்புரையில் பள்ளியின் தற்போதைய நிலை, பள்ளி மாணவர்களின் சாதனைகள், பள்ளியில் நடைபெறும் பல்வேறு சிறப்புச் செயல்பாடுகள், எதிர்காலத் திட்டங்கள், அரசு மூலம் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் போன்றவற்றை விரிவாக விளக்கி அனைத்து பள்ளி வயதுக் குழந்தைகளையும் அரசுப் பள்ளியில் சேர்த்திட வேண்டி கேட்டுக்கொண்டார். விழாவில் வட்டாரக் கல்வி அலுவலர்கள் திருமதி மாதம்மாள், திரு இராஜேந்திரன், கெங்கபிராம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் திரு தி. வெங்கடேசன், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அப்போது அவர்கள் அனைத்து மாணவர்களையும் அரசுப்பள்ளியில் சேர்க்க வேண்டியதன் அவசியம் மற்றும் அரசு வழங்கிடும் சலுகைகள் உள்ளிட்டவற்றை விரிவாக எடுத்துக் கூறினர். தொடர்ந்து விழாவில் சிறப்பு விருந்தினராக கல்ந்துக்கொண்ட ஊத்தங்கரை அரசு பல்தொழிற் நுட்பக் கல்லூரியின் முதல்வர் திரு எம். விஜயன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். அதில் அவர் நிகழ்வில் பங்கேற்ற அனைத்து மாணவர்களையும் பாராட்டியதோடு அவர்களை வழைநத்தும் ஆசிரியர்களுக்கும் பாராட்டு தெரிவித்தார். அடுத்து பள்ளி மாணவர்களின் திறன் வெளிப்பாடுகளாக தமிழ் ஆங்கிலம் ஆகியவற்றில் பேச்சு, கவிதை கூறல், திருக்குறள் ஒப்புவித்தல், பாரதியார் பாடல்கள் பாடுதல், மாவட்ட, மாநிலங்களின் பெயர்களை அவற்றின் தலைநகரங்களோடு கூறல் ஆகியவையும் தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் கண்கவர் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து ஆண்டுவிழா விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், பல்வேறு போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் ஊராட்சி மன்ற உறுப்பினர் திருமதி விஜய குமாரி பிரகாஷ், பல்தொழிற் நுட்பக் கல்லூரியின் துறைத் தலைவர் திரு செல்வராஜ், விரிவுரையாளர் திரு அன்புமணி, ஆகியோரும், அனைத்து பள்ளி மற்றூம் கல்லூரி மாணவர்களும், பெற்றோர்களும் முன்னாள் மாணவர்களும், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களும் கலந்துக்கொண்டனர் பள்ளி உதவி ஆசிரியர்கள் திரு ச. மஞ்சுநாதன், வெ. சண்முகம், மா. யோகலட்சுமி, ச. அனிதா ஆகியோர் விழாவிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்துனர்.. இறுதியில் அரசு பல்தொழிற் நுட்பக் கல்லூரியின் நாட்டு நலப் பணிகள் திட்ட அலுவலர் திரு சி. தியாகராஜன் அவர்கள் முகாமின் தொகுப்பறிக்கையை வழங்கி, விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி கூறினார்.
ext-align: center; ">
ty6L8">