ஒவ்வோர் ஆசிரியருக்கும் தான் பணியாற்றும் பள்ளி ஓர் கோயில்தான். அதன் அடிப்படையிலேயே நான் பணியாற்றும் பள்ளியின் சிறப்பு நிகழ்வுகளைத் தாங்கி வரும் இந்த வலைப்பூ - விற்கு கல்விக் கோயில் எனப் பெயரிட்டுள்ளேன். மேலும் அரசுப் பள்ளியும் கூட தரமான கல்வியையும், சீரிய ஒழுக்கத்தையும் அளிக்கும் பள்ளியே என்பதை உலகிற்கு உணர்த்திடவே இச்சிறிய முயற்சி.
புதன், 21 பிப்ரவரி, 2024
தமிழ்மாமணி விருது......
ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கவி. செங்குட்டுவன் எனும் செ. இராஜேந்திரன் அவர்களுக்கு 'உலகத் தாய்மொழி நாள் விழா'வில் "தமிழ்மாமணி" விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
திருச்சி நந்தவனம் அறக்கட்டளை சார்பில், திருச்சி பிரீஸ் ரெசிடென்சியில் நடைபெற்ற உலக தாய்மொழி நாள் விழாவில் ஊத்தங்கரை கவி. செங்குட்டுவன் அவர்களது உலகலாவிய தமிழ்ப் பணியைப் பாராட்டி "தமிழ்மாமணி" எனும் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
மேஜர் டோனர் கே. சீனிவாசன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், அறக்கட்டளை தலைவர் நந்தவனம் சந்திரசேகரன் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக தஞ்சாவூர் யோகம் ரியல் எஸ்டேட் நிருவாக இயக்குநர் இரா. செழியன், திருச்சி நவநீதா பில்டர்ஸ் நிருவாக இயக்குநர் பி. சுரேஷ் நவநீதா, மாவட்ட ரோட்டரி ஆளுனர் கார்த்திக் ஆகியோர் கலந்துக் கொண்டனர். பேராசிரியர் மீ. சந்திரசேகரன் அவர்கள் தமிழின் தொன்மை வரலாறு பற்றியும், பழந் தமிழர்களின் பண்பாட்டு விழுமியங்கள் குறித்தும் சிறப்புரை ஆற்றினார். ப.
தனபால் அனைவருக்கும் நன்றி கூறினார்.
நிகழ்வில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தமிழறிஞர்களும், தமிழார்வலர்களும் வந்து பங்கேற்றனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக