சனி, 25 ஜனவரி, 2020

தேசிய வாக்காளர் விழிப்புணர்வு நாள்>......


            ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இன்று (25.01.2020) *தேசிய வாக்காளர் நாள் உறுதிமொழி* பள்ளித் தலைமை ஆசிரியர் *திரு செ. இராஜேந்திரன் அவர்கள்* தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. இதில் உதவி ஆசிரியர்கள் திருமதி மு.இலட்சுமி, திரு வே. இராஜ்குமார், திரு ஜி.எம்.சிவக்குமார், தற்காலிக ஆசிரியர் திருமதி கா.நித்தியா மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.




திங்கள், 13 ஜனவரி, 2020

அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு சாதனைத் தமிழன் விருது.....

           ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் இராஜேந்திரனுக்கு சாதனைத் தமிழன் விருது வழங்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியரும், *மாநில நல்லாசிரியர் விருது பெற்றவருமான செ. இராஜேந்திரனின் கல்வி, கலை, மற்றும் இலக்கியச் சேவையைப் பாராட்டி, கரூரைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் *தமிழ் கலை இலக்கிய அறக்கட்டளை* அண்மையில் மதுரையில் நடைபெற்ற விழாவில் *சாதனைத் தமிழன்* எனும் விருதை அளித்து உள்ளது.

           இவ்விருதை அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் முனைவர் டி.கே. சத்தியசீலன் வழங்கினார். விழாவில் அறக்கட்டளையின் தலைவர் வழக்கறிஞர் சதீஷ், காரைக்குடி ஸ்ரீ கார்த்திகேயா பள்ளியின் செயலாளர் முனைவர் ஜீ. சுவேதா, உடற்கல்வி மூலம் பல்வேறு சாதனைகளை செய்த புலியூர் வீர திருப்பதி உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில், பரதநாட்டியம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை, சிலம்பம், நாட்டுப்புற இசை உள்ளிட்ட தமிழக மக்களின் பண்பாட்டு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சாதனையாளர்கள் வந்து பங்கேற்றனர்.