ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010

மாவட்ட முதலிட மாணவி

                  தேசியப் பசுமைப் படை மற்றும் சுற்றுச் சூழல் மன்றங்களின் சார்பில் ஒன்றிய, மாவட்ட அளவிலான போட்டிகள் நடைபெற்றது. அதில் ஒன்றிய அளவிலான வர்ணம் தீட்டுதல் போட்டியில் எமது பள்ளி 5ம் வகுப்பு மாணவி சு.சுகாசினி இரண்டாமிடம் பெற்றார். மேலும் காட்சிப் பொருள் போட்டியிலும் எமது பள்ளி இரண்டாமிடம் பெற்றது.
    அடுத்து மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் எமது பள்ளி மாணவி சு.சுகாசினி மாவட்ட முதலிடம் பெற்று பள்ளிக்கு பெருமைச் சேர்த்துள்ளார்.







புதன், 28 ஜூலை, 2010

பள்ளி சிறப்புப் பார்வை

          இன்று 27.07.2010 - ல் எமது பள்ளிக்கு இந்தியக் குடியரசுத் தலைவரால் சுகாதாரமான ஊராட்சிக்கு வழங்கப்படும் நிர்மல் கிராம் புரஸ்கார் விருது தேர்வுக் குழுத் தலைவர் திரு டி.எஸ். நிக்கால்ஜி அவர்களும் கிருஷ்ணகிரி மாவட்ட முழு சுகாதாரத் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளரான திரு காசி.மணி அவர்களும் வருகை புரிந்தனர். அப்போது அவர்கள் எமது பள்ளியின் சுற்றுபுறத் தூய்மை, மாணவர்களின் தன் தூய்மை மற்றும் பள்ளியின் சுற்றுச் சூழல் ஆகியவற்றைக் கண்டு பாராட்டுத் தெரிவித்தனர். மேலும் பள்ளியில் அமைகப்பட்டிருந்த சிறிய மூலிகைத் தோட்டம் கண்டு வியப்பு தெரிவித்ததுடன்  அதில் வளர்க்கப்பட்டிருந்த கற்பூர வள்ளி, கீழாநெல்லி, காசிபத்ரி, துளசி, பிரண்டை, மணித்தக்காளி, மஞ்சள் கரிசலாங்கண்ணி ஆகியவற்றைப் பரித்து சோதித்து பார்த்தனர்.









              

கல்வி வளர்ச்சி நாள் விழா

 


             இன்று 15.07.2010 – ல் எமது பள்ளியில் கர்மவீரர் காமராசரின் பிறந்த நாள்  விழா கல்வி வளர்ச்சி நாள் விழாவாகக் கொண்டாடப்பட்டது. முன்னதாக முற்பகலில் பள்ளியில் தேசியக் கொடி ஏற்றிய பின்னர் காமராசரின் திரு உருவப் படத்தை அலங்கரித்து பள்ளி கிராமத்தின் முக்கியப் பகுதிகள் வழியே மாணவர்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். அப்போது ஊர்வலத்தில் மாணவர்கள் பள்ளி செல்லா குழந்தைகள் பள்ளி செல்ல வேண்டியதன் அவசியம் மற்றும் கல்வி விழிப்புணர்வு வாசகங்களை முழங்கி  வந்தனர்.
                பின்னர் 1- முதல் 8 வரையிலான மாணவர்களுக்கு முறையே ஆங்கில பாடல்கள் பாடுதல், தமிழ் மற்று ஆங்கில பாடல்கள் பாடுதல், பாரதியார் பாடல்கள் பாடுதல், திருக்குறள் ஒப்புவித்தல், தேசத் தலைவர்கள் பற்றிய பேச்சுப் போட்டி, தேசத் தலைவர்கள் பற்றிய கட்டுரைப் போட்டி ஆகியன நடத்தப்பட்டது.
                பிற்பகலில் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி கிராமக் கல்விக் குழுத் தலைவரும், ஊராட்சிமன்றத் தலைவருமான திரு.இராதா நாகராஜ் அவர்கள் தலைமையேற்றார். பள்ளித் தலைமையாசிரியர் திரு.செ இராஜேந்திரன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். அப்போது அவர் பள்ளியில் நடைபெறும் பல்வேறு சிறப்புச் செயல்பாடுகள் பற்றியும் மாணவர்களின் திறன் வேளிப்பாட்டு நிகழ்வுகள் பற்றியும் எடுத்துக் கூறினார். பின்னர் வாழ்த்துரை மற்றும் கருத்துரை வழங்கிய உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திருமதி இரா.மனோகரி, கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திரு கொ.மா.சீனிவாசன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் திரு அ.வீ.விஜயகுமாரன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திரு கொ.பெ.திருவேங்கடம், பள்ளி கட்டடக் குழுத் தலைவர் திரு கோ.மோகன், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் துணைத் தலைவர் திரு கோ.மா.எத்திராசு ஆகியோர் பள்ளியின் பல்வேறு சிறப்புக்களை எடுத்துக் கூறி பள்ளித் தலைமையாசிரியர் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்களையும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
                பின்னர் சிறப்பு விருந்தினராகக் கலந்துக்கொண்ட ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளித் தலைமையாசிரியர் திரு. பி.பொன்னுசாமி அவர்கள்  போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் ஓர் அரசு துவக்க/ நடுநிலைப் பள்ளி இவ்வளவு சிறப்பாக, தூய்மையாக, பல வண்ண மலர்த் தோட்டங்களோடும், ஒழுக்கமும், திறமையும் மிக்க மாணவர்களோடும் இருக்கும் என்பதை நான் உண்மையிலேயே எதிர் பார்க்கவில்லை என்றும் தனியார் பள்ளிகளுக்கும் மேலான சிறப்பு கொண்டு திகழ்வதாகவும் கூறி பாராட்டி பேசினார்.
                இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் திரு சே.லீலாகிருஷ்ணன் அனைவருக்கும் நன்றி கூறினார்.



























ஞாயிறு, 11 ஜூலை, 2010

உலகத் தமிழ் செம்மொழித் மாநாட்டில் பள்ளித் தலைமையாசிரியர்.

          தமிழ் இணைய மாநாட்டு துவக்க விழாவில் பள்ளித் தலைமையாசிரியர்  

தமிழ அரசால் நடத்தப்பட்ட உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் பள்ளித் தலைமையாசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்பு பெற்றார்.
                  கோவையில் சூன் 23 முதல் 27 வரையில் நடைபெற்ற மாநாட்டில் பள்ளித் தலைமையாசிரியர் நோக்காளராகக் கலந்துக் கொள்ள தமிழ் இணைய மாநாட்டு அமைபாளர்களால் அழைக்கப்பட்டார். அதன் அடிப்படையில் 23 - ல் நடைபெற்ற செம்மொழி மாநாட்டுத் தொடக்க விழா மற்றும் 24 - ல் நடைபெற்ற தமிழ் இணைய மாநாட்டு தொடக்க விழா உள்ளிட்ட நிகழ்வுகளிலும் தொடர்ந்து நடைபெற்ற அனைத்து கருத்தரங்க நிகழ்வுகளிலும் பங்கு பெற்றார்.
 
               தமிழ்க் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களுடன் பள்ளித் தலைமையாசிரியர்
       தமிழ் மரபு அறக்கட்டளை திருமதி சுபாஷினி மற்றும் சென்னை பல்கலைக் கழக முன்னைத் துணைவேந்தர் திரு பொற்கோ அவர்களுடன் பள்ளித் தலைமையாசிரியர்
 நாசா அறிவியல் ஆய்வு மையத்தின் அறிவியலாளரும் தமிழ் மொழி ஆய்வறிஞருமான திரு நா.கண்ணன் அவர்களுடன் பள்ளித் தலைமையாசிரியர்.
             நாசா அறிவியலாளர் திரு நா.கண்ணன், ஆஸ்திரேலியாவில் வாழும் சிங்கை கணிப்பொறியியலாளர் திரு பாலாப் பிள்ளை அவர்களுடன் பள்ளித் தலைமையாசிரியர்
முதுபெரும் தமிழ் ஆய்வாளர் இலங்கை திரு கா.சிவத்தம்பி அவர்களுடன் பள்ளித் தலைமையாசிரியர்
                              அறிவியல் அறிஞர் திரு மயில்சாமி அண்ணாதுரை அவர்கள்