இன்று 27.07.2010 - ல் எமது பள்ளிக்கு இந்தியக் குடியரசுத் தலைவரால்  சுகாதாரமான ஊராட்சிக்கு வழங்கப்படும் நிர்மல் கிராம் புரஸ்கார் விருது  தேர்வுக் குழுத் தலைவர் திரு டி.எஸ். நிக்கால்ஜி அவர்களும் கிருஷ்ணகிரி  மாவட்ட முழு சுகாதாரத் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளரான திரு காசி.மணி  அவர்களும் வருகை புரிந்தனர். அப்போது அவர்கள் எமது பள்ளியின் சுற்றுபுறத்  தூய்மை, மாணவர்களின் தன் தூய்மை மற்றும் பள்ளியின் சுற்றுச் சூழல்  ஆகியவற்றைக் கண்டு பாராட்டுத் தெரிவித்தனர். மேலும் பள்ளியில்  அமைகப்பட்டிருந்த சிறிய மூலிகைத் தோட்டம் கண்டு வியப்பு தெரிவித்ததுடன்   அதில் வளர்க்கப்பட்டிருந்த கற்பூர வள்ளி, கீழாநெல்லி, காசிபத்ரி, துளசி,  பிரண்டை, மணித்தக்காளி, மஞ்சள் கரிசலாங்கண்ணி ஆகியவற்றைப் பரித்து சோதித்து  பார்த்தனர். 
 








 
நீராவி அய்யா, அம்மையப்பன் சார் அனைவரையும் புகைப்படத்தில் பார்க்க மகிழ்ச்சி..வாழ்த்துக்கள். மதுரை சுகாதாரம் இல்லை என ஆய்வு அறிக்கை கூறுகையில் நம் போன்ற ஆசிரியர்கள் மற்றும் பள்ளிகள் தான் சுற்றுபுற தூய்மையை மாணவர்களுக்கு கற்றுத்தரவேண்டும். என் பிலாக்..veeluthukal.blogspot.com.வந்து கருத்திட்டு , கல்வி சேவை செம்மைப்படுத்த உதவவும். வாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு