செவ்வாய், 21 ஜூன், 2016

சர்வதேச யோகா தின விழா - 2016.....


ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்,  பள்ளி உடல்நலச் சங்கம் சார்பில்  இன்று 21.06.2016ல் இந்திய திருநாட்டின் பாரம்பர்யக் கலையான சர்வதேச யோகா தினவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் பட்டதாரி உதவி ஆசிரியர் திருமதி ந. திலகா அனைவரையும் வரவேற்றார்.  விழாவில் தலைமையேற்று பேசிய பள்ளித்தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் யோகா கலை என்பது 5000 ஆண்டுகளுக்கும் முற்பட்ட இந்திய பாரம்பரியக் கலை எனவும், இக்கலை மனிதனின் உடல், உள்ளம், ஆன்மா ஆகிய அனைத்தின் ஒட்டு மொத்த பாதுகாப்பிற்கும், வளர்ச்சிக்கும் பயன்படக்கூடியது எனவும் கூறினார்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துக்கொண்ட மனவளக்கலை  துணை பேராசிரியர் திருமதி அனுசுயா அவர்கள் மாணவர்கள் யோகா கற்பதன் மூலம் மூளை வளர்ச்சி மற்றும் நினைவாற்றல் மேம்படும் எனக்கூறி மாணவர்களுக்கு கைப்பயிற்சி, கால்பயிற்சி, கண்பயிற்சி, இடுப்புப் பயிற்சி, மூச்சுப்பயிற்சி மற்றும் தண்டுவடச்சுத்தி ஆகிய பயிற்சிகளை கற்பித்தார். பின்னர் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்தோடு அனைத்து பயிற்சிகளையும் மேற்கொண்டனர்.
விழாவில் உதவி ஆசிரியர்கள் திரு வே. வஜ்ஜிரவேல். திருமதி அ. நர்மதா ஆகியோர்  கலந்துக்கொண்டனர்.
 






























வியாழன், 16 ஜூன், 2016

தேர்வுநிலை ஆணை வழங்கும் விழா.......

               கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றிய தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு இன்று 15.06.2016ல் தேர்வுநிலை ஆணைகள் வழங்கப்பட்டது.
         
            ஒன்றிய உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திரு மு. விஜயராஜ் அவர்கள் தலைமையிலும், கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திருமதி த. மகேஸ்வரி அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்ற விழாவில் முன்னதாக மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலக கண்காணிப்பாளர் திரு குழந்தைவேலு அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். பின்னர் கடந்த 2004 மற்றும் 2005 ஆண்டுகளில் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமணம் பெற்று 01.06.2006ல் முறைப்படுத்தப்பட்ட தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தற்போது பணியாற்றி வரும் 59 பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு அவர்கள் தாம் ஏற்ற பணியில் பத்தாண்டு காலம் முடித்தமைக்கான தேர்வுநிலை ஆணைகள் விழாவில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துக்கொண்ட கிருஷ்ணகிரி மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் திரு ஜெ. பாபு அவர்களால் வழங்கப்பட்டது. இதன் மூலம் சம்மந்தப்பட்ட ஆசிரியர்கள் இனி தமது ஊதியத்தில் 6% கூடுதலாகப் பெறுவர். ஆணைகளை வழங்கிப் பேசிய மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் அவர்கள் அனைத்து ஆசிரியர்களும் தமது திறன்களை முழுமையாகப் பயன்படுத்தி மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். 
           இறுதியில் தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்டத்தலைவர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார்.
          விழாவில் தமிழக ஆசிரியர் கூட்டணி வட்டாரச் செயலாளர் திரு சே. லீலாகிருஷ்ணன், வட்டாரத் தலைவர் கி. கோபால், பொருளாளர் திரு த. செல்வம், மகளிர் அணிச் செயலாளர் திருமதி க தமிழ்ச்செல்வி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் திரு செ. வெங்கடேசன், வட்டாரச் செயலாளர் திரு மு. மோகன், மாவட்டத் துணைச் செயலாளர் திரு செந்தில்குமார், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் மாவட்டச் செயலாளர் திரு மா. கிருஷ்ணமூர்த்தி, வட்டாரத் தலைவர் திரு சி.ந. பழனி, பொருளாளர் திரு எஸ். ராஜ்குமார், உள்ளிட்ட திரளான ஆசிரியர்கள் கலந்துக்கொண்டனர்



























திங்கள், 6 ஜூன், 2016

உலக சுற்றுச் சூழல் தினவிழா 2016



ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (21.03.2016) ”உலக சுற்றுச் சூழல் தினவிழா” கொண்டாடப்பட்டது.
பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ.இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் முன்னதாக பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியரும் சுற்றுச் சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளருமான திருமதி மு. இலட்சுமி அனைவரையும் வரவேற்றார்.
பள்ளித் தலைமை ஆசிரியர் தமது தலைமை உரையில் உலக சுற்றுச் சூழல் நாள் தொடர்பாக கருத்துக்களையும் அவை கொண்டாடப்படுவதன் அவசியம் குறித்தும் விரிவாக விளக்கினார். மேலும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு  எவ்வகையில் மனித குலத்திற்கு பயன் தருகிறது என்பது குறித்தும் தெளிவாக விளக்கினார்.
விழாவில் உலக சுற்றுச்சூழல் நாள் தொடர்பான கவிதை, பேச்சுப் போட்டியில் கலந்துக்கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகள்  வழங்கப்பட்டது.
பின்னர் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் நாள் நினைவாக மரக் கன்றுகள் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மூலம் நடப்பட்டது.
பள்ளி உதவி ஆசிரியர் ந. திலகா வாழ்த்துரை வழங்கினர்.
இறிதியில் உதவி ஆசிரியர் திருமதி அ. நர்மதா அனைவருக்கும் நன்றி கூறினார்.