செவ்வாய், 21 ஜூன், 2016

சர்வதேச யோகா தின விழா - 2016.....


ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்,  பள்ளி உடல்நலச் சங்கம் சார்பில்  இன்று 21.06.2016ல் இந்திய திருநாட்டின் பாரம்பர்யக் கலையான சர்வதேச யோகா தினவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் பட்டதாரி உதவி ஆசிரியர் திருமதி ந. திலகா அனைவரையும் வரவேற்றார்.  விழாவில் தலைமையேற்று பேசிய பள்ளித்தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் யோகா கலை என்பது 5000 ஆண்டுகளுக்கும் முற்பட்ட இந்திய பாரம்பரியக் கலை எனவும், இக்கலை மனிதனின் உடல், உள்ளம், ஆன்மா ஆகிய அனைத்தின் ஒட்டு மொத்த பாதுகாப்பிற்கும், வளர்ச்சிக்கும் பயன்படக்கூடியது எனவும் கூறினார்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துக்கொண்ட மனவளக்கலை  துணை பேராசிரியர் திருமதி அனுசுயா அவர்கள் மாணவர்கள் யோகா கற்பதன் மூலம் மூளை வளர்ச்சி மற்றும் நினைவாற்றல் மேம்படும் எனக்கூறி மாணவர்களுக்கு கைப்பயிற்சி, கால்பயிற்சி, கண்பயிற்சி, இடுப்புப் பயிற்சி, மூச்சுப்பயிற்சி மற்றும் தண்டுவடச்சுத்தி ஆகிய பயிற்சிகளை கற்பித்தார். பின்னர் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்தோடு அனைத்து பயிற்சிகளையும் மேற்கொண்டனர்.
விழாவில் உதவி ஆசிரியர்கள் திரு வே. வஜ்ஜிரவேல். திருமதி அ. நர்மதா ஆகியோர்  கலந்துக்கொண்டனர்.
 






























2 கருத்துகள்: