புதன், 17 டிசம்பர், 2014

பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்......

 
பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்
ஊத்தங்கரை ஒன்றியம் கெங்கபிராம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் கெங்கபிராம்பட்டி குறுவள மைய அளவிலான பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான மூன்று நாள் பயிற்சி முகாம் 15.12.2014 முதல் 17.12.2014 வரையில் நடைபெற்றது.
     கெங்கபிராம்பட்டி குறுவள மைய ஒருங்கிணைப்பாளர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற மூன்று நாள் பயிற்சி முகாமை முதல் நாள் ஊத்தங்கரை ஒன்றிய உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திரு இரா. பிரசாத் அவர்கள் துவக்கி வைத்தார். இப்பயிற்சி முகாமில் ஜோதிநகர், கெங்கபிராம்பட்டி, சின்னகுன்னத்தூர், பேயனூர், உப்பாரப்பட்டி, அப்பிநாயக்கன்பட்டி, மண்ணாண்டியூர், நாப்பிராம்பட்டி, கொண்டம்பட்டி, தாண்டியப்பனூர், சந்தகொட்டாவூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த துவக்க, நடுநிலை, உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களும், அப்பள்ளிகளைச் சேர்ந்த பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களும் மொத்தம் 68 பேர் கலந்துக்கொண்டனர்.
     மூன்று நாட்கள் நடைபெற்ற பயிற்சியில் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டம், பள்ளி வளர்ச்சித் திட்டம் தொடர்பான விழிப்புணர்வு கருத்துக்கள் விரிவாக  விளக்கப்பட்டது. பயிற்சி நாட்களில் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
     இப்பயிற்சி முகாமில் ஒன்றிய வளமைய மேற்பார்வையாளர் திரு இரா. நேரு, ஆசிரியப் பயிற்றுனர் திருமதி இரா. ஆர்த்தி, பட்டதாரி ஆசிரியர் செல்வி க. சுகுணா ஆகியோர் கலந்துக்கொண்டு பயிற்சி அளித்தனர்.
     இறுதிநாள் நிகழ்வில் அனைவருக்கும் கல்வித் திட்ட முதன்மைக் கல்வி திரு பொன். குமார் அவர்கள் கலந்துக்கொண்டு பயிற்சியின் நோக்கம், குழந்தைகள் கல்வி கற்க வேண்டியதன் அவசியம் மற்றும் இதன் மூலம் அரசின் எதிர்பார்ப்புகள் ஆகியவை குறித்து விரிவாக விளக்கிப் பேசினார்.


















































வியாழன், 11 டிசம்பர், 2014

பாரதியார் பிறந்தநாள் விழா

இன்று 11.12.2014 வியாழக்கிழமை எமது பள்ளியில் பள்ளி தமிழ் இலக்கிய மன்றம் சார்பில் பாரதியார் பிறந்தநாள்  விழா கொண்டாடப்பட்டது.

முன்னதாக காலையில் பள்ளி வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட பாரதியாரின் படத்திற்கு பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களால் மரியாதை செலுத்தப்பட்டது.

பின்னர் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில், பள்ளித் தலைமை ஆசிரியர் தமது தலைமை உரையில் இன்று அகில இந்தியா முழுமையும் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும்  பாரதியாரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்படுவது குறித்தும், அதற்கு காரணம் பாரதியாரின் தன்னலமற்ற பங்களிப்புதான் என்பது குறித்தும் விரிவாக பேசியதோடு அனைவரும் பாரதியாரின் எண்ணங்களை செயல்படுத்திட முன்வர  வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
பின்னர் மாணவர்கள் பாரதியார் பிறந்தநாள் தொடர்பான பேச்சு, கட்டுரை, கவிதை, பாடல் மற்றும் ஓவியப் போட்டிகளில் தமது திறமைகளை வெளிப்படுத்தினர்.
அதன் பின்னர் போடிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் உதவி ஆசிரியர்கள் திருமதி மு. இலட்சுமி, செல்வி . இலதா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.