பள்ளி
மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்
ஊத்தங்கரை ஒன்றியம் கெங்கபிராம்பட்டி ஊராட்சி
ஒன்றிய நடுநிலை பள்ளியில் கெங்கபிராம்பட்டி குறுவள மைய அளவிலான பள்ளி மேலாண்மை குழு
உறுப்பினர்களுக்கான மூன்று நாள் பயிற்சி முகாம் 15.12.2014 முதல்
17.12.2014 வரையில் நடைபெற்றது.
கெங்கபிராம்பட்டி குறுவள மைய ஒருங்கிணைப்பாளர்
திரு
செ. இராஜேந்திரன் அவர்கள்
தலைமையில் நடைபெற்ற மூன்று நாள் பயிற்சி முகாமை முதல் நாள் ஊத்தங்கரை ஒன்றிய உதவித்
தொடக்கக் கல்வி அலுவலர் திரு இரா. பிரசாத் அவர்கள் துவக்கி வைத்தார். இப்பயிற்சி முகாமில்
ஜோதிநகர், கெங்கபிராம்பட்டி, சின்னகுன்னத்தூர், பேயனூர், உப்பாரப்பட்டி, அப்பிநாயக்கன்பட்டி,
மண்ணாண்டியூர், நாப்பிராம்பட்டி, கொண்டம்பட்டி, தாண்டியப்பனூர், சந்தகொட்டாவூர் ஆகிய
பகுதிகளைச் சேர்ந்த துவக்க, நடுநிலை, உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களும்,
அப்பள்ளிகளைச் சேர்ந்த பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களும் மொத்தம் 68 பேர்
கலந்துக்கொண்டனர்.
மூன்று நாட்கள் நடைபெற்ற பயிற்சியில் கட்டாயக்கல்வி
உரிமைச் சட்டம், பள்ளி வளர்ச்சித் திட்டம் தொடர்பான விழிப்புணர்வு கருத்துக்கள்
விரிவாக விளக்கப்பட்டது. பயிற்சி நாட்களில்
பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
இப்பயிற்சி முகாமில் ஒன்றிய வளமைய மேற்பார்வையாளர்
திரு இரா. நேரு, ஆசிரியப் பயிற்றுனர் திருமதி இரா. ஆர்த்தி, பட்டதாரி
ஆசிரியர் செல்வி க. சுகுணா ஆகியோர் கலந்துக்கொண்டு பயிற்சி அளித்தனர்.
இறுதிநாள் நிகழ்வில் அனைவருக்கும்
கல்வித் திட்ட முதன்மைக் கல்வி திரு பொன். குமார் அவர்கள் கலந்துக்கொண்டு பயிற்சியின் நோக்கம், குழந்தைகள்
கல்வி கற்க வேண்டியதன் அவசியம் மற்றும் இதன் மூலம் அரசின் எதிர்பார்ப்புகள் ஆகியவை
குறித்து விரிவாக விளக்கிப் பேசினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக