வியாழன், 15 ஆகஸ்ட், 2013

67 வது இந்திய சுதந்திர தினவிழா



ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி
ஜோதிநகர், ஊத்தங்கரை ஒன்றியம்.
67 வது இந்திய சுதந்திர தினவிழா
இன்று 15.08.2013 எமது பள்ளியில் 67வது இந்திய சுதந்திர தினவிழா சிறப்பாக நடைபெற்றது.
முன்னதாக பள்ளியில் காலை இறைவணக்கக் கூட்டத்தில் பள்ளி கல்விக் குழுத் தலைவர் திரு டி. பூபதி அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.
 பின்னர் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் இந்தியத் திருநாட்டின் 67வது சுதந்திர தின விழா நடைபெற்றது. அதில் பள்ளித் தலைமை ஆசிரியர் தனது தலைமை உரையில் இந்திய நாடு சுதந்திரம் பெறுவதற்கு பாடுபட்ட தலைவர்களையும், தியாகிகளையும் நினைவு கூர்ந்ததோடு, அன்று நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்கள் சாதி, மதம், இனம், மொழி, என எதையும் பொருட்படுத்தாமல்  ஒன்றுபட்டு போராடியதையும் நினைவு கூர்ந்தார். மேலும் இன்று நாம் சுதந்திர இந்தியாவில் வாழ்வதால் கிடைத்துள்ள மிக முக்கியமான பயன் சுயசார்பு கொள்கையை நாம் வகுத்துக்கொள்வதற்கான உரிமை, இதன் மூலமே நாம் இன்று பல்துறைகளிலும் முன்னேற்றம் கண்டுள்ளோம். உலகில் மக்கள் தொகையில் இரண்டாவது பெரிய நாடாக நாம் இருக்கும் அதே வேளையில் பல்தொழில் நுட்பம், மென்பொருளியல் வளர்ச்சி, கட்டற்ற அறிவுப் பெருக்கம் ஆகியவற்றைக் கண்டு உலகமே நம்மை இன்று அச்சதோடு பார்க்கின்றன எனவும், நாம் பெற்ற சுதந்திரம் நம்மை மேலும் மேம்படுத்தும் வகையில் நாம் அதை பேணிக்காக்க வேண்டும் எனவும் கூறினார்.   விழாவில் பள்ளி மாணவர்கள் இந்திய சுதந்திரத்திற்கு பாடுபட்ட தேசத்தலைவர்களான மகாத்மா காந்தி, பண்டிட் ஜவகர்லால் நேரு, கர்மவீரர் காமராசர், ஆகியோர் பற்றி  தமிழிலும், ஆங்கிலத்திலும் பேசினர், பின்னர் அவர்களின் சேவையைப் போற்றும் வகையில் கவிதைகளையும், பாடல்களையும் பாடினர். அடுத்துப் பேசிய பள்ளி கல்விக் குழுத் தலைவர் உள்ளிட்டவர்கள் இந்திய சுதந்திரத்திற்கு பாடுபட்டவர்களின் நினைவை போற்ற வேண்டுமெனக் கேட்டுக்கொண்டனர்.
பின்னர் விளையாட்டு, இலக்கியம், பொது அறிவு போன்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மைக் குழு, கிராமக் கல்விக் குழு உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை உதவி ஆசிரியர்கள் திரு ப. சரவணன், திரு வே. வஜ்ரவேல், திருமதி அ. நர்மதா ஆகியோர் செய்தனர். இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் திருமதி சு. சாரதா அனைவருக்கும் நன்றி கூறினார்.














































ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013

விலையில்லா சீருடை மற்றும் காலணிகள் வழங்குதல்

எமது பள்ளியில் மாணவர்களுக்கான விலையில்லா சீருடைகள் மற்றும் விலையில்லா காலணிகள் வழங்கப்பட்டது.











வெள்ளி, 26 ஜூலை, 2013

பள்ளி மேலாண்மைக் குழுக்கூட்டம




இன்று (28.06.2013) எமது பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் திருமதி பூ. கனகராணி தலைமை தாங்கினார். முன்னதாக பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் பள்ளியின் தற்போதைய நிலை மற்றும் எதிர்கால கூடுதல் தேவைகள் பற்றியும் பள்ளி மாணவர்களின் கல்வி முன்னேற்றம் குறித்தும் விரிவாகப் பேசினார். பின்னர் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம் : 1
நமது பள்ளி எல்லைக்குட்பட்ட கிராமங்களில் உள்ள பள்ளி வயது குழந்தைகள் அனைவரையும் பள்ளியில் சேர்த்திடவும், அவ்வாறு சேர்க்கப்பட்ட அனைத்து பள்ளி வயதுக் குழந்தைகளையும் இடை நிறுத்தமின்றி தொடர்ந்து படித்திடச் செய்யவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளல்.
தீர்மானம் : 2.
தற்போது ஊராட்சி ஒன்றியம் மூலம் கட்டப்பட்டுவரும் மாணவர்களுக்கான கழிவறைப் பணிகளை விறைந்து முடித்திட வேண்டி சம்மந்தப்பட்ட அலுவலர்களைக் கேட்டுக்கொள்ளல்.
தீர்மானம் : 3.
தற்போது பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளைக் குழாய் கிணற்றில் மோட்டார் பம்ப் பொருத்தித் தரவேண்டி தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களை கேட்டுக்கொள்ளல்.
கூட்டத்தின் இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் திருமதி சு. சாரதா அனைவருக்கும் நன்றி கூறினார்.