ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி
ஜோதிநகர், ஊத்தங்கரை ஒன்றியம்.
67 வது
இந்திய சுதந்திர தினவிழா
இன்று 15.08.2013 எமது பள்ளியில் 67வது இந்திய
சுதந்திர தினவிழா சிறப்பாக நடைபெற்றது.
முன்னதாக பள்ளியில் காலை இறைவணக்கக் கூட்டத்தில்
பள்ளி கல்விக் குழுத் தலைவர் திரு டி. பூபதி அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து அனைவருக்கும்
இனிப்பு வழங்கினார்.
பின்னர் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன்
அவர்கள் தலைமையில் இந்தியத் திருநாட்டின் 67வது சுதந்திர தின விழா நடைபெற்றது. அதில்
பள்ளித் தலைமை ஆசிரியர் தனது தலைமை உரையில் இந்திய நாடு சுதந்திரம் பெறுவதற்கு பாடுபட்ட
தலைவர்களையும், தியாகிகளையும் நினைவு கூர்ந்ததோடு, அன்று நாட்டின் சுதந்திரத்திற்காக
பாடுபட்டவர்கள் சாதி, மதம், இனம், மொழி, என எதையும் பொருட்படுத்தாமல் ஒன்றுபட்டு போராடியதையும் நினைவு கூர்ந்தார். மேலும்
இன்று நாம் சுதந்திர இந்தியாவில் வாழ்வதால் கிடைத்துள்ள மிக முக்கியமான பயன் சுயசார்பு
கொள்கையை நாம் வகுத்துக்கொள்வதற்கான உரிமை, இதன் மூலமே நாம் இன்று பல்துறைகளிலும் முன்னேற்றம்
கண்டுள்ளோம். உலகில் மக்கள் தொகையில் இரண்டாவது பெரிய நாடாக நாம் இருக்கும் அதே வேளையில்
பல்தொழில் நுட்பம், மென்பொருளியல் வளர்ச்சி, கட்டற்ற அறிவுப் பெருக்கம் ஆகியவற்றைக்
கண்டு உலகமே நம்மை இன்று அச்சதோடு பார்க்கின்றன எனவும், நாம் பெற்ற சுதந்திரம் நம்மை
மேலும் மேம்படுத்தும் வகையில் நாம் அதை பேணிக்காக்க வேண்டும் எனவும் கூறினார். விழாவில்
பள்ளி மாணவர்கள் இந்திய சுதந்திரத்திற்கு பாடுபட்ட தேசத்தலைவர்களான மகாத்மா காந்தி,
பண்டிட் ஜவகர்லால் நேரு, கர்மவீரர் காமராசர், ஆகியோர் பற்றி தமிழிலும், ஆங்கிலத்திலும் பேசினர், பின்னர் அவர்களின்
சேவையைப் போற்றும் வகையில் கவிதைகளையும், பாடல்களையும் பாடினர். அடுத்துப் பேசிய பள்ளி
கல்விக் குழுத் தலைவர் உள்ளிட்டவர்கள் இந்திய சுதந்திரத்திற்கு பாடுபட்டவர்களின் நினைவை
போற்ற வேண்டுமெனக் கேட்டுக்கொண்டனர்.
பின்னர் விளையாட்டு, இலக்கியம், பொது அறிவு
போன்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில்
பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மைக் குழு, கிராமக் கல்விக் குழு உறுப்பினர்கள்
கலந்துக்கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை உதவி ஆசிரியர்கள் திரு ப. சரவணன், திரு வே.
வஜ்ரவேல், திருமதி அ. நர்மதா ஆகியோர் செய்தனர். இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் திருமதி
சு. சாரதா அனைவருக்கும் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக