வெள்ளி, 17 பிப்ரவரி, 2012

கிராமக் கல்விக் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்.

கிராமக் கல்விக் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்.

                            கடந்த 13.02.2012 முதல் 15.02.2012 வரையில் எமது பள்ளி இணைந்துள்ள கெங்கபிராம்பட்டி குறுவள மையத்தில் கிராமக் கல்விக் குழு மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான  3 நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.
     அதில் ஜோதிநகர் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் சிறப்புக் கருத்தாளராகக் கலந்துக்கொண்டு பயிற்சி அளித்தார்.
     முன்னதாக நடைபெற்ற பயிற்சி துவக்க விழாவில் மைய பொறுப்பு ஆசிரியப் பயிற்றுநர் வி. சண்முகம் வரவேற்புரை நிகழ்த்தினார். கெங்கபிராம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் அமுதா செல்வம் தலைமை தாங்கினார். உப்பாரப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் வி.சிவலிங்கம், கொண்டம்பட்டி  ஊராட்சி மன்றத் தலைவர் கி. மாதேஸ் உப்பாரப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பி. வீரமணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மைய உதவி ஒருங்கிணைப்பாளர் பி.சிவன் அனைவருக்கும் நன்றி கூறினார்.
     மூன்று நாட்கள் நடைபெற்ற பயிற்சி முகாமில் குழந்தைகள் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009, குழந்தைகளின் உரிமைகள், அரசு பள்ளிகளில் வழங்கப்படும் தரமான கல்வி, நலவாழ்வு,சத்துணவு, மற்றும் சுகாதாரம் பற்றியும் கிராமக் கல்விக் குழு மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களின் முக்கியப் பணிகள், பள்ளிகளுக்கு அவர்கள் செய்ய வேண்டிய உதவிகள் பற்றியும் மிக விரிவாக கலந்துரையாடப்பட்டது.
     நிகழ்வுகளின் இடையே பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், யோகா நிகழ்ச்சிகள் ஆகியன நடத்திக் காட்டப்பட்டது. அதில் ஜோதிநகர் பள்ளி மாணவர்களால் நடத்திக் காட்டப்பட்ட DIFFERENCE BETWEEN TRADITIONAL AND ACTIVITY LEARNING METHODOLOGY CLASS ROOM.என்ற நிகழ்ச்சியும் மாணவர்கள் இடைநிற்றல் தொடர்பான ஆங்கில மற்றும் தமிழ் பேச்சும் அனைவரையும் கவர்ந்தது. அரசு பள்ளி மாணவர்களாலும் எளிமையாக ஆங்கிலத்தில் உரையாட முடியும் என்பதை நிரூபிப்பதாய் இந்நிகழ்வு அமைந்திருந்தது.
     இப்பயிற்சி முகாமில் 12 பள்ளிகளைச் சேர்ந்த கிராமக் கல்விக் குழுத் தலைவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்துக்கொண்டனர்.    
                                        
    
                                      
                                     
        




                                        

                                        



            
                                                  

வியாழன், 26 ஜனவரி, 2012

இந்திய நாட்டின் 63வது குடியரசு நாள் விழா


  ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் நடுநிலைப் பள்ளியில் இன்று(26.01.2012) இந்திய நாட்டின் 63வது குடியரசு நாள் விழா கொண்டாடப்பட்டது.
        பள்ளி கிராமக் கல்விக் குழுத் தலைவர் திரு டி. பூபதி அவர்கள் தலைமை தாங்கினார். பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ.இராஜேந்திரன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். அவர் தனது உரையில் இந்த நாளின் முக்கியத்துவம் பற்றிக் கூறி, இந்தியத் சுதந்திரத்திற்கு பாடுபட்ட தியாகிகளை நினைவு கூர்ந்தார்.
          பின்னர் பள்ளி மாணவர்கள் குடியரசு தினவிழா பற்றியும் அதன் சிறப்புகள் பற்றியும் ஆங்கிலத்திலும் தமிழிலும் பேசினர். சிலர் தேச பக்திப் பாடல்கள் பாடினர்.
          விழாவில் பள்ளி உதவி ஆசிரியர்கள் திருமதி சு.சாரதா, வஜ்ரவேல். இலட்சுமி ஆகியோரும் கருத்துரை வழங்கினர்.‌







தேசிய வாக்காளர் விழிப்புணர்வு நாள் விழா


 ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் நடுநிலைப் பள்ளியில் இன்று(25.01.2012)தேசிய வாக்காளர் விழிப்புணர்வு நாள் விழா கொண்டாடப்பட்டது.

         பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ.இராஜேந்திரன் அவர்கள் தலைமை தாங்கினார். அவர் தனது உரையில் இந்த நாளின் முக்கியத்துவம் பற்றிக் கூறி, இந்தியத் தேர்தல் ஆணையம் துவக்கப்பட்ட நாள் 25.01.1950 என்பதை நினைவு கூர்ந்தார். பின்னர் புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது.



வெள்ளி, 13 ஜனவரி, 2012

பள்ளியில் பொங்கல் விழா.

எமது பள்ளியில் ( ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, ஜோதிநகர், ஊத்தங்கரை ஒன்றியம் ) இன்று பொங்கல் விழா மிகச்சிற‌ப்பாகக் கொண்டாடப்பட்டது. முன்னதாக பள்ளி மாணவர்களின் பங்கேற்போடு துவங்கிய இவ்விழா ஆசிரியர்களின் மேற்பார்வையில் மிகச்சிற‌ப்பாக கிராமத்து திருவிழாவாகவும், இய‌ற்கையைப் போற்றும் விழாவான சூரியனை வழிபடும் விழாவாகவும் துவங்கியது. விழாவில் மாணவர்கள் மிகவும் மகிழ்வோடும், ஆர்வத்தோடும் பங்கேற்றனர். அப்போது செங்கரும்பு, மஞ்சள், பூசணி ஆகியவற்றையும், பல வண்ண பலூன்களையும்  மாணவர்களே கொண்டுவந்து பூசையில் வைத்தும் புதுப் பானையில் பொங்கல் வைக்கும் நிகழ்வில் பங்கேற்றும் மகிழ்ச்சி
அடைந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில்  உதவி ஆசிரியர்கள் ப.சரவணன், சு.சாரதா, ச.இலட்சுமி, பெ.கஸ்தூரி, க.வஜ்ரவேலு ஆகியோர் செய்திருந்தனர்.


                                     

                                      

                                      

                                     







சனி, 7 ஜனவரி, 2012

கிராமக் கல்விக்குழு நாள் விழா


 
                  

                         ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கிராமக் கல்விக்குழு நாள் விழா நடைபெற்றது. விழாவிற்கு கிராமக் கல்விக் குழுத் தலைவர் திரு. டி.பூபதி தலைமை தாங்கினார். முன்னதாக வரவேற்புரை ஆற்றிய பள்ளித் தலைமை ஆசிரியர் திரு. செ. இராஜேந்திரன் தற்போதைய பள்ளியின் நிலைப்பாடு பற்றியும், இனி வருங்காலங்களில் செயல்படுத்தப்பட உள்ள கல்வி மற்றும் இதர செயல்பாடுகள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார். விழாவில் ஊத்தங்கரை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திரு இரா. நாகராஜு, கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திரு கொ.மா. சீனிவாசன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திருமதி பத்மா உள்ளிட்ட பொறுப்பாளர்களும் பெற்றோர்களும் கலந்துக்கொண்டனர். நிகழ் ச்சியில் 1 முதல் 8 வகுப்பு வரை உள்ள மாணவர்கள் தத்தமது தனித்திறமைகளை வெளிக்காட்டும் வகையில் ஆங்கில செய்தித் தாள் வாசித்தல், ஆங்கிலத்தில் உரையாடுதல்,ஆங்கிலத்தில் கவிதை வாசித்தல், செயல்வழிக் கல்வி அட்டைகளை ஆங்கிலம் மற்றும் தமிழில் வாசித்தல் படம் வரைந்துக் காட்டுதல் அறிவியல் வினாடி - வினா நிகழ்வில் பங்குபெறல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நிகழ்த்திக் காட்டினர். நிகழ்வில் பங்கு பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இவை அனைத்தும் பள்ளிப் பெற்றோர்களின் முன்னிலையில் நடைபெற்றமையால் பெற்றோர்கள் அனைவரும் மிக்க மகிழ்வோடும் தமது குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் மிகச் சிறப்பான கல்வியைப் பெறுகிறார்கள் என்ற திருப்தியோடும் சென்றனர். இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் திருமதி வி. கஸ்தூரி நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி உதவி ஆசிரியர்கள் திருமதி      சு. சாரதா, திருமதி இலட்சுமி, திரு வி. வஜ்ரவேல் ஆகியோர் செய்தனர்.








தமிழ் மரபு அரக்கட்டளைக் குழுவினரின் பள்ளிப்பார்வை....

  

                   ஜெர்மனி நாட்டைத் தலைமையிடமாகக்கொண்டு இயங்கிவரும் தமிழ்மரபு அறக்கட்டளை உலகெங்கும் உள்ள கிராமங்கள்,நகரங்கள் ஆகியவற்றில்காணப்படும் தமிழ் மொழி சார்ந்த, தமிழ்மரபு சார்ந்த,தமிழ் கல்வி,கலை,கலாச்சாரம் சார்ந்த செய்திகளை எல்லாம் நேரடியாகச் சென்று அவற்றைத் திரட்டி, வருங்காலச் சந்ததினர் பயன்படுத்தும் வகையில் மின்னாக்கம் செய்து வருகின்றனர்.அதன் ஒருபகுதியாக தற்போது தமிழகம் வந்துள்ள இவ்வமைப்பின் தலைவர் ஜெர்மனி திருமதி சுபாஷினிட்ரெம்மல், துணைத்தலைவர் கொரியா திரு நா.கண்ணன், பெங்களூரு ஸ்வர்ணலட்சுமி ஆகியோர் இன்று எமது பள்ளிக்கு வந்து பார்வையிட்டனர். அப்போது பள்ளியின் வளாகத் தூய்மை, தோட்ட பராமரிப்பு, சுற்றுச் சூழலை காத்திடும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மக்கும், மக்காத குப்பைக் குழிகள், மூலிகைத் தோட்டம் ஆகியவற்றைப் பார்த்து மகிழ்ச்சி தெரிவித்தனர். அதேபோல் மாணவர்களுடன் நீண்ட நேரம் உரையாடிய அவர்கள் அவர்களின் கல்வி, திறன் வெளிப்பாடு ஆகியவற்றை கேட்டறிந்ததோடு தற்போது தமிழகத்தில் உள்ள கல்வித்திட்டம் பற்றியும் அதன் நடைமுறைச் செயலாக்கம் பற்றியும் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்களிடம் கேட்டறிந்து மகிழ்சி தெரிவித்தனர். நிறைவாக இப்பள்ளி போல் அனைத்து பள்ளிகளும் சிறப்பாக இயங்க ஊக்குவிக்கும் வகையில் தமிழ் மரபு அறக்கட்டளை மூலம் உதவிகள் செய்திட முயற்சி மேற்கொள்ளப்படும் எனவும் உறுதி அளித்தனர்.