ஒவ்வோர் ஆசிரியருக்கும் தான் பணியாற்றும் பள்ளி ஓர் கோயில்தான். அதன் அடிப்படையிலேயே நான் பணியாற்றும் பள்ளியின் சிறப்பு நிகழ்வுகளைத் தாங்கி வரும் இந்த வலைப்பூ - விற்கு கல்விக் கோயில் எனப் பெயரிட்டுள்ளேன். மேலும் அரசுப் பள்ளியும் கூட தரமான கல்வியையும், சீரிய ஒழுக்கத்தையும் அளிக்கும் பள்ளியே என்பதை உலகிற்கு உணர்த்திடவே இச்சிறிய முயற்சி.
திங்கள், 4 ஜூலை, 2011
ஞாயிறு, 26 ஜூன், 2011
பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம்
எமது பள்ளியில் 24.06.2011 - ல் பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்ளிப் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திரு கே.பி.திருவேங்கடம் தலைமை தாங்கினார். முன்னதாக பள்ளித் தலைமையாசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். அப்போது அவர் தமது உரையில் பள்ளியின் தற்போதைய வளர்ச்சி நிலைகள் குறித்தும் இவ்வாண்டுக்கான புதிய செயல் திட்டங்கள் பற்றியும் எடுத்துரைத்தார். பின்னர் பேசிய பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மற்றும் கிராமக் கல்விக் குழுத் தலைவரும் மூன்றம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவருமான இராதா நாகராஜன் ஆகியோர் பள்ளியின் வளர்ச்சி நிலை பற்றி சிறப்பாக எடுத்துக் கூறி பாராட்டுத் தெரிவித்தனர். பின்னர் பள்ளி பெற்றோர்களின் கருத்துரைகளுக்குப் பின் உதவி ஆசிரியர் திரு பி. பாண்டுரங்கன் அனைவருக்கும் நன்றி கூறினார்.
செவ்வாய், 21 ஜூன், 2011
வெள்ளி, 15 ஏப்ரல், 2011
மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணியில் சிறந்த மேற்பார்வையாளருக்கான பாராட்டு.
பள்ளித் தலைமையாசிரியர் திரு செ.இராஜேந்திரன் அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் திரு வி அருண்ராய் அவர்கள் பரிசளிக்கும் காட்சி. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திரு சி.பிரகாசம் மற்ரும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்.
கடந்த 1 சூன் 2010 முதல் 28 பிப்ரவரி 2011 வரையில் நமது இந்திய நாடு முழுமையும் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புப்பணி மிகத்தீவிரமாக நடைபெற்றது. எமது கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் அப்பணி இரண்டு கட்டங்களாக மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது.
இப்பணியில் சிறப்பாகச் செயல்பட்டமைக்காக கொட்டுகாரம்பட்டி நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் திரு செ. இராஜேந்திரன் ஆகிய எனக்கு வழங்கப்பட்டது. சிறந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்புப்பணி மேற்பார்வையாளர் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவரால் அறிவிக்கப்பட்டு பாராட்டும் பரிசும் வழங்கப்பட்டது.
கடந்த 1 சூன் 2010 முதல் 28 பிப்ரவரி 2011 வரையில் நமது இந்திய நாடு முழுமையும் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புப்பணி மிகத்தீவிரமாக நடைபெற்றது. எமது கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் அப்பணி இரண்டு கட்டங்களாக மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது.
இப்பணியில் சிறப்பாகச் செயல்பட்டமைக்காக கொட்டுகாரம்பட்டி நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் திரு செ. இராஜேந்திரன் ஆகிய எனக்கு வழங்கப்பட்டது. சிறந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்புப்பணி மேற்பார்வையாளர் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவரால் அறிவிக்கப்பட்டு பாராட்டும் பரிசும் வழங்கப்பட்டது.
திங்கள், 28 மார்ச், 2011
நலமாய் வாழக் கற்றுக் கொள்வேன் - கற்றுக்கொடுப்பேன்
எமது பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கான “நலமாய் வாழக் கற்றுக் கொள்வேன் - கற்றுக் கொடுப்பேன்” எனும் தலைப்பிலான பயிற்சி முகாம் துவக்கப்பட்டது. பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ.இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் துவங்கிய இம்முகாமில் பள்ளி மாணவர்களின் உடல்நலம் குறித்த விழிப்புணர்வும், எளீய மருத்துவச் சிகிட்சை முறைகளும் குறித்த பல்வேறு கருத்துக்களைப் பள்ளித் தலைமை ஆசிரியர் தமது மாணவர்களுடன் பகிர்ந்துக்கொண்டார். பின்னர் பள்ளி மாணவர்கள் தத்தமது உயரம் அதற்கேற்ற உடல் எடைபற்றி அறிந்துக்கொண்டனர். அதற்கென பள்ளியில் வாங்கி வைக்கப்பட்டுள்ள எடைக் கருவி, உயரம் அளந்திடும் அளவுகோள் ஆகியவற்றை மாணவர்களே பயன்படுத்தி தமது அளவீடுகளை அறிந்ததோடு மற்ற மாணவர்களின் அளவீடுகளையும் அளந்து கூறியது பயனுடையதாய் அமைந்தது. இப்பயிற்சியின் பொருப்பாசிரியரான திருமதி சி.தாமரைச்செல்வி அவர்கள் அனைத்து மாணவர்களையும் ஒருங்கினைத்து அவர்களுக்குத் தேவையான மருத்துவக் குறிப்புகளையும், பிற ஆலோசனைகளையும் கூறினார். இப்பயிற்சிக்கென பள்ளியில் முதலுதவிப் பெட்டி, வீட்டு மருத்துவம் தொடர்பான இயற்கை மருத்துவப் பொருட்கள் அடங்கிய பெட்டி ஆகியன பிரத்தியேகமாக தயார் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வியாழன், 27 ஜனவரி, 2011
நூலகப் போட்டிகள்
எமது ஊராட்சியின் சார்பில் நூலக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவர்கள மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொள்ளும் வகையில் வரைபடத்தில் இடங்களைக் கண்டறிதல் போட்டி, நினைவாற்றல் சோதிக்கும் போட்டி, கவிதைப் போட்டி, வரைபடப்போட்டி, பேச்சுப் போட்டி ஆகிய போட்டிகள் நடைபெற்றது. அதில் எமது பள்ளி மாணவர்கள் வரபடத்தில் இடங்களை கண்டறிதல், பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி ஆகியவற்றில் முதலிடமும் மற்ற இரு போட்டிகளிலும் இரண்டாமிடமும் பெற்று சாதணை படைத்தனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)