ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010

இந்திய சுதந்திரத் திருநாள் விழா



    இன்று இந்திய சுதந்திர திருநாள் விழா எமது பள்ளியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு கிராமக் கல்விக் குழுத் தலைவரும், மூன்றம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவருமான இராதா நாகராசன் அவர்கள் தலைமை தாங்கினார். விழாவில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திரு கே.பி.திருவேங்கடம், துணைத் தலைவர் கே.எம்.எத்திராசு உள்ளிட்ட பொறுப்பாளர்களும் பெற்றோர்களும் அதிக அளவில் கலந்துக்கொண்டனர்.
    விழாவில் மாணவர்களுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.











































சிறந்த ஆலோசகர் விருது.

                 கிருஷ்ணகிரி மாவட்ட செஞ்சிலுவச் சங்கம் சார்பில் ஜெனீவா ஒப்பந்த நாள் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக இளைஞர் செஞ்சிலுவைச் சங்க மாணவர்களின் ஊர்வலத்தோடு துவங்கிய விழா மாவட்ட ஆட்சித் தலைவர் திரு வி. அருண்ராய் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. விழாவில் மாவட்ட முதண்மைக் கல்வி அலுவலர் திரு பி. மூர்த்தி, மாவட்ட முதண்மைக் கல்வி அலுவலர் (அனைவருக்கும் கல்வித் திட்டம்) திரு எம்.பாஸ்கர், மாவட்டக் கல்வி அலுவலர் திரு எஸ்.மார்ஸ், இளைஞர் செஞ்சிலுவைச் சங்க மாவட்ட கண்வீனர் திரு சி.செங்குட்டுவன் உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டனர்.
    இவ்விழாவில் இப்பள்ளியின் தலைமையாசிரியருக்கு இளைஞர் செஞ்சிலுவைச் சங்க சிறந்த ஆலோசகர் விருது (JUNIOR REDCROSS BEST COUNSELLOR AWARD) மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் வழங்கப்பட்டது.இவ்விருது இதுவரையில் உயர்/மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டுமே வழ்ங்கப்பட்டு வந்த நிலையில் முதண்முறையாக தற்போதுதான் ஓர் நடுனிலைப் பள்ளி ஆசிரியருக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.























மாவட்ட முதலிட மாணவி

                  தேசியப் பசுமைப் படை மற்றும் சுற்றுச் சூழல் மன்றங்களின் சார்பில் ஒன்றிய, மாவட்ட அளவிலான போட்டிகள் நடைபெற்றது. அதில் ஒன்றிய அளவிலான வர்ணம் தீட்டுதல் போட்டியில் எமது பள்ளி 5ம் வகுப்பு மாணவி சு.சுகாசினி இரண்டாமிடம் பெற்றார். மேலும் காட்சிப் பொருள் போட்டியிலும் எமது பள்ளி இரண்டாமிடம் பெற்றது.
    அடுத்து மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் எமது பள்ளி மாணவி சு.சுகாசினி மாவட்ட முதலிடம் பெற்று பள்ளிக்கு பெருமைச் சேர்த்துள்ளார்.







புதன், 28 ஜூலை, 2010

பள்ளி சிறப்புப் பார்வை

          இன்று 27.07.2010 - ல் எமது பள்ளிக்கு இந்தியக் குடியரசுத் தலைவரால் சுகாதாரமான ஊராட்சிக்கு வழங்கப்படும் நிர்மல் கிராம் புரஸ்கார் விருது தேர்வுக் குழுத் தலைவர் திரு டி.எஸ். நிக்கால்ஜி அவர்களும் கிருஷ்ணகிரி மாவட்ட முழு சுகாதாரத் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளரான திரு காசி.மணி அவர்களும் வருகை புரிந்தனர். அப்போது அவர்கள் எமது பள்ளியின் சுற்றுபுறத் தூய்மை, மாணவர்களின் தன் தூய்மை மற்றும் பள்ளியின் சுற்றுச் சூழல் ஆகியவற்றைக் கண்டு பாராட்டுத் தெரிவித்தனர். மேலும் பள்ளியில் அமைகப்பட்டிருந்த சிறிய மூலிகைத் தோட்டம் கண்டு வியப்பு தெரிவித்ததுடன்  அதில் வளர்க்கப்பட்டிருந்த கற்பூர வள்ளி, கீழாநெல்லி, காசிபத்ரி, துளசி, பிரண்டை, மணித்தக்காளி, மஞ்சள் கரிசலாங்கண்ணி ஆகியவற்றைப் பரித்து சோதித்து பார்த்தனர்.