
ஒவ்வோர் ஆசிரியருக்கும் தான் பணியாற்றும் பள்ளி ஓர் கோயில்தான். அதன் அடிப்படையிலேயே நான் பணியாற்றும் பள்ளியின் சிறப்பு நிகழ்வுகளைத் தாங்கி வரும் இந்த வலைப்பூ - விற்கு கல்விக் கோயில் எனப் பெயரிட்டுள்ளேன். மேலும் அரசுப் பள்ளியும் கூட தரமான கல்வியையும், சீரிய ஒழுக்கத்தையும் அளிக்கும் பள்ளியே என்பதை உலகிற்கு உணர்த்திடவே இச்சிறிய முயற்சி.
ஞாயிறு, 14 செப்டம்பர், 2025
சக்தி வித்யாபூஷன் விருது........
இன்று கோவை ஸ்ரீ சக்தி பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற ஆசிரியர் நாள் விழாவில் ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்களுக்கு, அவரின் சிறப்பான கல்விப் பணியை பாராட்டி *சக்தி வித்யாபூஷன்* எனும் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் பாலகுருசாமி, எழுத்தாளர் மரபின் மைந்தன் முத்தையா, கல்லூரித் தலைவர் தர்மலிங்கம், முதல்வர் ஜெயபிரகாஷ், தாளாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக