ஞாயிறு, 14 செப்டம்பர், 2025

சக்தி வித்யாபூஷன் விருது........

இன்று கோவை ஸ்ரீ சக்தி பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற ஆசிரியர் நாள் விழாவில் ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்களுக்கு, அவரின் சிறப்பான கல்விப் பணியை பாராட்டி *சக்தி வித்யாபூஷன்* எனும் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் பாலகுருசாமி, எழுத்தாளர் மரபின் மைந்தன் முத்தையா, கல்லூரித் தலைவர் தர்மலிங்கம், முதல்வர் ஜெயபிரகாஷ், தாளாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர்.

திங்கள், 8 செப்டம்பர், 2025

முப்பெரும் விழா......

ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று 08.09.2025 ஆசிரியர் நாள் விழா, உலக எழுத்தறிவு நாள் விழா, இலக்கியப் போட்டிகளில் ஒன்றிய அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா உள்ளிட்ட  முப்பெரும் விழா நடைபெற்றது.

பள்ளித் தலைமை ஆசிரியர் செ. இராஜேந்திரன் அவர்கள
 தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் முன்னதாக உதவி ஆசிரியர் சோ. சிவகுருநாதன் அனைவரையும் வரவேற்றார். உதவி ஆசிரியர்கள் கோ. ஆனந்தன், மா.யோகலட்சுமி, இரா. ஜீவா, கணினி பயிற்றுநர் ச. மரகதம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பள்ளித் தலைமை ஆசிரியர் தமது சிறப்புரையில், ஒரு ஆசிரியராக தமது வாழ்க்கையைத் துவங்கி,  இந்தியாவின் முதல் துணைக் குடியரசுத் தலைவராகவும் இரண்டாவது குடியரசுத் தலைவராகவும்  பதவி வகித்த டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 5 ஆம் நாள் இந்திய அளவில் ஆசிரியர் நாளாகக் கொண்டாடப்படுகிறது எனவும், அக்டோபர் 5ஆம் நாள் உலக ஆசிரியர் நாளாக கொண்டாடப்படுகிறது எனவும் கூறி, இந்நாட்கள்  கொண்டாடப்படுவதன் அவசியம் மற்றும் எப்போதுமே தன்னிடம் படிக்கும் மாணவனை உயர்த்திப் பார்த்து மகிழ்வடையும் ஆசானுக்கு செய்யும் நன்றி விழாவாகும் எனவும் கூறினார்.
பின்னர் உலக அளவில் கல்லாமையை இல்லாமை ஆக்கிடவும், எழுத்தறிவு தொடர்பான விழிப்புணர்வு உலக அளவில் ஏற்படுத்திடவும் யுனெஸ்கோ 1966ல் முன்னெடுத்து, 1967 முதல் செப்டம்பர் 8ம் நாளை உலக எழுத்தறிவு நாளாக கொண்டாடப்படுகிறது என்பது குறித்தும் விளக்கினார். 
தொடர்ந்து ஊத்தங்கரை ஒன்றிய அளவில் நடைபெற்ற தமிழ், ஆங்கில மொழி இலக்கியப் போட்டிகளில் வெற்று பெற்று மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க தேர்வு பெற்றுள்ள மாணவர்கள் செ. குமுதா, ஜெ. பிரித்திகா, ப. துவாரகா, ம. குரு உள்ளிட்ட மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இறுதியில் உதவி ஆசிரியர் மா. யோகலட்சுமி அனைவருக்கும நன்றி கூறினார்.
உதவி ஆசிரியர் பூ. இராம்குமார் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார்.