ஒவ்வோர் ஆசிரியருக்கும் தான் பணியாற்றும் பள்ளி ஓர் கோயில்தான். அதன் அடிப்படையிலேயே நான் பணியாற்றும் பள்ளியின் சிறப்பு நிகழ்வுகளைத் தாங்கி வரும் இந்த வலைப்பூ - விற்கு கல்விக் கோயில் எனப் பெயரிட்டுள்ளேன். மேலும் அரசுப் பள்ளியும் கூட தரமான கல்வியையும், சீரிய ஒழுக்கத்தையும் அளிக்கும் பள்ளியே என்பதை உலகிற்கு உணர்த்திடவே இச்சிறிய முயற்சி.
சனி, 27 ஜூலை, 2024
பள்ளி அளவிலான சதுரங்க போட்டிகள்....
ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று பள்ளி அளவிலான சதுரங்கப் போட்டிகள் நடைபெற்றது.
முன்னதாக பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் சதுரங்கப் போட்டியின் விதிமுறைகளை அனைவருக்கும் விளக்கி போட்டியைத் துவக்கி வைத்தார்.
போட்டிகள் 11 வயதுக்கு உட்பட்டவர்கள், 14 வயதுக்கு உட்பட்டவர்கள் என இரு பிரிவுகளாக ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித் தனியாக நடைபெற்றது. அதில் 11 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆண்கள் பிரிவில் தா. யோகேஸ்வரன், சே. நித்திஷ் ஆகியோரும், பெண்கள் பிரிவில் ம. பூஜா, சே. ஸ்ரீவர்த்தனி ஆகியோரும், 14 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆண்கள் பிரிவில் ம. குரு, க. நவீன்குமார் ஆகியோரும், பெண்கள் பிரிவில் கோ. அகிலா, தா. தாரணி ஆகியோரும் சிறப்பிடம் பெற்றனர். இவர்கள் அனைவரும் ஆகஸ்ட் 6 அன்று நடைபெறும் வட்டார அளவிலான போட்டிகளில் பங்குபெற தகுதி பெற்றனர்.
இவர்களுக்கு அனைத்து ஆசிரியர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
நிகழ்வில் உதவி ஆசிரியர்கள் கோ. ஆனந்தன், பூ. இராம்குமார், மா. யோகலட்சுமி, மு. அனிதா, கணினி பயிற்றுநர் மு. அகிலா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
கிருஷ்ணகிரியில் பள்ளி அளவிலான சதுரங்க போட்டி
http://www.newstoday24x007.com/2024/07/blog-post_852.html
திங்கள், 15 ஜூலை, 2024
கல்வி வளர்ச்சி நாள் விழா - 2024....
ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (15.07.2024) கல்வி வளர்ச்சி நாள் விழா கொண்டாடப்பட்டது.
முன்னதாக பள்ளி இறை வணக்கக் கூட்டத்தில் தி தேசியக் கொடி ஏற்றப்பட்டு, காமராசரின் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாள் விழாவாக தமிழ்நாடு அரசு மூலம் கொண்டாடப்படும் செய்தியை மாணவர்களுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் கூறினார், இதில் வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர் திரு சண்முகம் கலந்துக்கொண்டார்.
தொடர்ந்து பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில்நடைபெற்ற அரங்க நிகழ்வில் பள்ளி மாணவர்கள் தமிழ், ஆங்கிலம் பேச்சு, கவிதைகள், பாடல்கள் மூலம் காமராசரின் சிறப்புகள் குறித்து தமது கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டனர்.
நிகழ்வில் பேசிய பள்ளித் தலைமை ஆசிரியர் கர்ம வீரர் காமராசரின் பன்முகத் தன்மை கொண்ட செயல்பாடுகளையும், தன்னலமில்லாத அவரின் வாழ்க்கை நிகழ்வுகளையும் பகிர்ந்துக்கொண்டார்.
அடுத்து நிகழ்வில் பங்கேற்ற ஊத்தங்கரை இஸ்லாமிய நல அறக்கட்டளை தலைவர், திரு சென்ஷா, செயலாளர் திரு பாபு, தமிழக முஸ்லீம் முன்னேறக் கழக மாவட்டச் செயலாளர் திரு வாகித் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
தொடர்ந்து நிகழ்வின் சிறப்பு அழைப்பாளர் தருமபுரி அகில இந்திய வானொலி நிலைய நிகச்சிச் தொகுப்பாளர் அரிமா நூருல்லா செரீப் அவர்கள் *கல்வி* என்ற தலைப்பில் மாணவர்களோடு கலந்துரையாடினார். இதில் மாணவர்கள் அதிக உற்சாகத்தோடு பங்கேற்று பல்வேறு கருத்துக்களை அறிந்துக்கொண்டனர்.
அடுத்து நிகழ்வில் பங்கேற்ற அழைப்பாளர்களுக்கு நூல் பரிசும், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகளும், இனிப்பும் வழங்கப்பட்டன.
இறுதியில் பட்டதாரி ஆசிரியர் சோ. சிவ குருநாதன் அனைவருக்கும் நன்றி கூறினார்.
நிகழ்வில் உதவி ஆசிரியர்கள் மா. யோகலட்சுமி, மு. அனிதா, பள்ளி கணினி பயிற்றுநர் மு. அகிலா ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)