ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று 15.08.2020, இந்திய திருநாட்டின் 74வது சுதந்திர நாள் விழா கொண்டாடப்பட்டது. பள்ளித் தலைமை ஆசிரியர் செ. இராஜேந்திரன் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சுதந்திர நாள் கருத்துரை நிகழ்த்தினார். பின்னர் பள்ளி வளாகத்தில் தலைமை ஆசிரியர் மற்றும் உதவி ஆசிரியர்களால் மரக் கன்றுகள் மூலிகைச் செடிகள் நடப்பட்டது. நிகழ்வில் பள்ளி உதவி ஆசிரியர்கள் மு. இலட்சுமி, வே. இராஜ்குமார், ஜி.எம். சிவக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக