புதன், 25 ஜூலை, 2018

தமிழ் எழுத்துருக்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்ய சுட்டிகள்……

TAMIL FONTS

FONTS DOWNLOAD



































                                                TAMIL-158 TAMIL FONT DOWNLOAD


சனி, 14 ஜூலை, 2018

கல்வி வளர்ச்சி நாள் விழா - 2018




இன்று 14.07.2018 சனிக்கிழமை எமது பள்ளியில் பள்ளி தமிழ் இலக்கிய மன்றம் சார்பில் கர்ம வீரர் காமராசரின் 116வது பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாள் விழாவாக கொண்டாடப்பட்டது.
பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ.  இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில், முன்னதாக பள்ளி உதவி ஆசிரியர் திருமதி மு.இலட்சுமி அனைவரையும் வரவேற்றார்.
பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தமது தலைமை உரையில் இன்று அனைத்து பள்ளி கல்லூரிகளிலும் கொண்டாடப்பட்டு வரும் கல்வி வளர்ச்சி நாள் விழா குறித்தும், அதற்கான அவசியம், காரணம் மற்றும் இந்நாளில் பிறந்த கர்ம வீரர் என்று அனைவராலும் போற்றப்படும் காமராசர் குறித்தும் விரிவாக விளக்கி இவ்விழா கொண்டாடப்படுவதன் அடிப்படை வரலாறு குறித்தும் விரிவாக பேசியதோடு, அனைவரும் அவரின் வாழ்க்கை நிகழ்வுகளை பின்பற்றி நடக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
 பள்ளி மாணவர்கள் கல்வி வளர்ச்சி நாள் குறித்தும் காமராசர் குறித்தும் சிறப்பாக பேசியும், பாடல்களைப் பாடியும், கவிதைகளை வாசித்தும் விழாவை சிறப்பித்தனர்.
தொடர்ந்து மாணவர்கள் திறன்பேசி மூலம் Q.R. கோடை ஸ்கேன் செய்து அதிலுள்ள பயிற்சித் தாளை செய்து காட்டியமையும், எளிய வழியில் பெருக்கல் கணக்கையும், கண மூலம், வர்க்க மூலம் ஆகியவற்றையும் செய்து காட்டியமையும், 118 தனிமங்களையும் அவற்றின் குறியீட்டோடு கூறியமையும் பெற்றோர்களையும், விழாவில் பங்கேற்ற கல்வியாளர்களையும் பெரிதும் கவர்ந்தது.
பின்னர் விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துக் கொண்ட ஊத்தங்கரை வட்டாரக் கல்வி அலுவலர் திருமதி கோ. மாதேசுவரி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் திருமதி இரா. வசந்தி, ஆசிரியப் பயிற்றுநர் திரு பா. சிவப்பிரகாசம், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர் திருமதி கு. ஆனந்தி, பெற்றோர் ஆசிரியர் கழகத் துணைத் தலைவர் திருமதி பொ. அம்பிகா ஆகியோர் மாணவர்களையும் ஆசிரியர்களையும் வாழ்த்திப் பேசினர்.
அதன் பின்னர் பேச்சு, கட்டுரை, ஓவியம் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
பள்ளி உதவி ஆசிரியர்கள் விழாவை ஒருங்கிணைத்து நடத்திச் சென்றார்.
                இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் திருமதி ந. திலகா அனைவருக்கும் நன்றி கூறினார்.
     விழாவில் பள்ளி உதவி ஆசிரியர் த. லதா, சத்துணவு மைய ஒருங்கிணைப்பாளர் பீமன் உள்ளிட்ட அதிக அளவிலான பெற்றோர்களும் கலந்துக் கொண்டனர்