ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர்
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்இன்று (22.03.2018) ”உலக வனநாள் மற்றும் நீர்நாள் விழா” கொண்டாடப்பட்டது
பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ.இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் முன்னதாக பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியரும் சுற்றுச் சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளருமான திருமதி மு. இலட்சுமி அனைவரையும் வரவேற்றார்.
பள்ளித் தலைமை ஆசிரியர் தமது தலைமை உரையில் உலக வனநாள் தொடர்பான கருத்துக்களையும் அவை கொண்டாடப்படுவதன் அவசியம் குறித்தும் விரிவாக விளக்கினார். மேலும் புவியைக் காக்க சுற்றுச்சுழலை நாம் பாதுகாக்க வேண்டும் எனவும், காடுகள் அதிக அளவில் வளர்க்கப்பட வேண்டும் எனவும் கூறி அக்காடுகள் எவ்வகையில் மனித குலத்திற்கு பயன் தருகிறது என்பது குறித்தும் தெளிவாக விளக்கினார்.
விழாவில் உலக வனநாள் தொடர்பான ஓவியம், பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றோருக்கு பரிசும், பாராட்டுச் சான்றுகளும் வழங்கப்பட்டது. தொடர்ந்து போட்டிகளில் கலந்துக்கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
பின்னர் பள்ளியில் உலக வனநாள் நினைவாக மரக் கன்றுகள் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மூலம் நடப்பட்டது.
இறுதியில் உதவி ஆசிரியர் திரு வே, வஜ்ஜிரவேல் அனைவருக்கும் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக