சனி, 25 மார்ச், 2017

சர்வதேச மகளிர் நாள் விழா ........





            இன்று 08.03.2017 புதன்கிழமை எமது பள்ளியில் பள்ளி தமிழ் இலக்கிய மன்றம் சார்பில் சர்வதேச மகளிர் நாள் விழா கொண்டாடப்பட்டது.
பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில், முன்னதாக பள்ளி ஏழாம் வகுப்பு மாணவி இனியா அனைவரையும் வரவேற்றார். பின்னர் பள்ளி உதவி ஆசிரியர்கள் திருமதி மு. இலட்சுமி, திருமதி த. லதா, திருமதி அ. நர்மதா ஆகியோர் மகளிர் தினம் குறித்தும் அது கொண்டாடப்படுவதன் அவசியம், குறித்தும் கருத்துரை வழங்கினர்.
            பள்ளித் தலைமை ஆசிரியர் டிரு செ. இராஜேந்திரன் அவர்கள் தமது தலைமை உரையில் இன்று உலகம் முழுமையும் கொண்டாடப்பட்டு வரும் சர்வதேச மகளிர் நாள் குறித்தும், அதற்கான அவசியம், காரணம் மற்றும் இந்நாள் கொண்டாடப்படுவதன் அடிப்படை வரலாறு குறித்தும் விரிவாக பேசியதோடு, அனைவரும் மகளிரை போற்றி கொண்டாட வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
            முன்னதாக பள்ளி மாணவர்கள் சர்வதேச மகளிர் தினம் குறித்தும் அதன் வரலாறு குறித்தும் சிறப்பாக பேசினர்.
அதன் பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
              இறுதியில் ஆறாம் வகுப்பு மாணவி சுபா அனைவருக்கும் நன்றி கூறினார்.







































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக