ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் நடுநிலைப் பள்ளியின் 2017 - 18 மாணவர் சேர்க்கைக்கான கல்வி விழிப்புணர்வு களப் பயணம் நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற களப் பயணத்தில் பள்ளி ஆசிரியர்கள் திருமதி மு. இலட்சுமி, அ. நர்மதா ஆகியோரும் மாணவர்களும் பங்கு பெற்றனர்.
அப்போது பள்ளியில் இருந்து ஒரு கி. மீ தூரத்தில் உள்ள ஏரியில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி அளிப்புத் திட்டப் பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த சுமார் 350க்கும் மேற்பட்ட பெற்றோர்கள், பொதுமக்கள் ஆகியோர் முன்னிலையில் கல்வியின் அவசியம் மற்றும் கல்வி விழிப்புணர்வு தொடர்பாக பள்ளித் தலைமை ஆசியரால் பல்வேறு கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டது.
தொடர்ந்து பேசிய பள்ளித் தலைமை ஆசிரியர் அரசுப் பள்ளிகளில் மட்டுமே குழந்தைகளின் பல்வேறு திறமைகளை மேம்படுத்தும் பண்முகக் கல்வி வழங்கப்படுவதை பல்வேறு எடுத்துக்காட்டுகள் மூலமும், தமது பள்ளியில் நடைமுறைப்படுத்தி வரும் பல்வேறு சிறப்புச் செயல்பாடுகள் மூலமும் விரிவாக விளக்கினார். மேலும் அரசு மூலம் பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்படும் பல்வேறு விலையில்லாத் திட்டப் பொருட்கள் பற்றியும் கூறி அவற்றைப் பயன்படுத்திக்கொண்டு அனைத்து குழந்தைகளையும் தமது ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சேர்த்து பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டார்.