இன்று 23.02.2017 வியாழக்கிழமை எமது பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழுக்
கூட்டம்
நடைபெற்றது.
பள்ளி மேலாண்மைக் குழுத்
தலைவர் திருமதி கு. ஆனந்தி அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முன்னதாக பள்ளி
உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி அனைவரையும் வரவேற்றார்
பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் பள்ளியின் தற்போதைய வளர்ச்சிப் பணிகள், மாணவர் முன்னேற்றம்,
கல்வித் தர வளர்ச்சி ஆகியவைபற்றி விரிவாக விளக்கினார். பின்னர் கூட்டத்தில் கலந்துக்கொண்ட பெற்றோர்கள் பள்ளியின்
எதிர்கால வளர்ச்சி குறித்து கருத்துரை வழங்கினர்.
பின்னர் 1 முதல் 3 வகுப்பு
வரையிலான மாணவர்கள் ஆங்கில உரையாடல், தமிழ்நாடு மாவட்டங்கள் நிலப்படத்தில் காட்டுதல்,
திருக்குறள் ஒப்புவித்தல் உள்ளிட்ட நிகழ்வுகளை பெற்றோர்கள் முன்பாக நிகழ்த்திக்காட்டினர்.
கூட்டத்தில் தொடர்ந்து கீழ்க்கண்ட
தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம் :
1.
அடுத்த
ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடர்பாக பள்ளி எல்லைக்குட்பட்ட அனைத்து குக் கிராமங்களிலும்
சரியான முறையில் பள்ளி வயது குழந்தைகள் கணக்கெடுப்பை நடத்திட ஆசிரியர்களுக்கு முழு
ஒத்துழைப்பு வழங்குதல்.
2.
அடுத்த
ஆண்டு பள்ளி மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டி அனைத்து பெற்றோர்களையும் நேரடியாகச்
சந்தித்தல்.
3.
மாணவர்களின்
திறன் மேம்பாட்டிற்காக பல புதிய கற்றல்/கற்பித்தல் முறைகளை அடுத்த ஆண்டு நடைமுறைப்படுத்த
முயற்சி மேற்கொள்ளப்படும்.
இறுதியில் உதவி ஆசிரியர் திரு வே.
வஜ்ஜிரவேல் அனைவருக்கும் நன்றி
கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக