வியாழன், 20 பிப்ரவரி, 2014

மாவட்டத்தில் முதல் இணைய இணைப்பு பெற்ற பள்ளி


           பள்ளிக் கல்வித் துறை சார்பில் அரசு பள்ளிகளுக்கு இடையே வகுப்பறைக் கல்வி இணைப்புத் திட்டம் (Collaborative Learning through Connecting Class Room across Tamil Nadu) செயல்படுத்தப்பட உள்ளது.

      மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் முன்னோடிப் பள்ளிகளில் நடைபெறும் வகுப்பறைக் கல்வியை மற்ற பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களும் அறிந்து கொள்ளும் வகையிலும், சிறப்புப் பயிற்சி பெறுவதற்கும், பள்ளி கல்வித் துறை சார்பில் பள்ளிகளுக்கு இடையே வகுப்பறைக் கல்வி இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
              அதன் அடிப்படையில் மாவட்டத்திற்கு நான்கு பள்ளிகள் வீதம் மாநில அரசு சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அப்பள்ளிகளில் முதல் கட்டமாக பள்ளிகளுக்கு அகன்ற கற்றை இணைய இணைப்பு (BROAD BAND) பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
         அதன்படி கிருஷ்ணகிரி மாவட்ட அரசு துவக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் நடுநிலைப் பள்ளி பாரத் சஞ்சார் நிகாம் (BSNL) மூலம் அகன்ற கற்றை இணைய இணைப்பு பெற்ற முதல் பள்ளியாகத் திகழ்கிறது. 
      இப்பள்ளியின் இணைய சேவை இன்று மானவர்கள் முன்னிலையில் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. 
       இதன் மூலம் இப்பள்ளியில் இனி இணைய வழி கற்றல்/கற்பித்தல் நிகழ்வு நடைபெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
                  இச்சேவையை மாவட்டத்தில் முதல் முறையாகப் பெற்றமைக்கு மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் திரு டி. துரைசாமி, உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திரு இரா. பிரசாத், கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திரு கொமா. சீனிவாசன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக