இன்று எமதுபள்ளியில் 3,4,5 மற்றும் 6ஆம் வகுப்பு பயிலும் தாழ்த்தப்பட்ட/பழங்குடியின மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவிகளுக்கான கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.
எமது பள்ளியில் தற்போது பயிலும் 3,4,5 வகுப்பு பயிலும் 3 தாழ்த்தப்பட்ட மாணவிகளுக்கான கல்வி உதவித் தொகை ரூ 500 வீதமும், 3,4,5 வகுப்பு பயிலும் 13 மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவிகளுக்கான கல்வி உதவித் தொகை ரூ 500 வீதமும், 6ம் வகுப்பு பயிலும் 5 மாணவிகளுக்கான கல்வி உதவித் தொகை ரூ 1000 வீதமும் சம்மந்தப்பட்ட மாணவிகளின் தாயார் பெயரில் உள்ள அஞ்சலக சேமிப்புக் கணக்கில் செலுத்தி அதற்கான சேமிப்புப் புத்தகம் இன்று அனைவருக்கும் வழங்கப்பட்டது.
பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட சமூக நலத்துறையின் மூலம் வழங்கப்படும் இத்தொகை அவர்களுக்கு மிகவும் பயன்படும்.