இன்று (03.12.2013) ஊத்தங்கரை ஒன்றிய வள மையத்தில் சர்வதேச
மாற்றுத் திறனாளிகள் தின விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
ஒன்றிய வளமைய மேற்பார்வையாளர் திருவாளர்
சி. சிவராமன் அவர்கள் தலைமையில்
நடைபெற்ற விழாவில் முன்னதாக ஆசிரியப் பயிற்றுநர் திரு சங்கர் அனைவரையும் வரவேற்றார்.
விழாவில் ஊத்தங்கரை உதவித் தொடக்கக் கல்வி
அலுவலர் திருவாளர் இரா. பிரசாத், கூடுதல் உதவித் தொடக்க்க் கல்வி அலுவலர் திருவாளர்
கொ.மா. சீனிவாசன், ஜோதிநகர்
ஊ.ஒ.ந.நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் திருவாளர் செ. இராஜேந்திரன், ஊத்தங்கரை அரசு பெண்கள் மேநிலைப் பள்ளி
பட்டதாரி ஆசிரியர் திருவாளர் குப்புசாமி (மாற்றுத் திறனாளி) ஊத்தங்கரை அரசு ஆண்கள்
மேநிலைப் பள்ளி ஆசிரியர் திருவாளர் க. கணேசன் ஆகியோர் கலந்துக்கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
அப்போது மாற்றுத் திறனாளிகளின் பல்வேறு திறன்களை வெளிப்படுத்திடவே இது போன்ற விழாக்கள்
நடத்தப்படுவதாகவும். இதன் மூலம் அவர்கள் சமூகத்தில் சமநிலை பெற்று உயர வேண்டும் எனவும்
சமூகத்தில் இத்தகையவர்களின் திறமைக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டனர்,
விழாவில் பங்கு பெற்ற மாற்றுத் திறனாளி ஆசிரியர்
திரு குப்புசாமி அவர்கள் புல்லாங்குழல் மற்றும் மௌத்ஆர்கன் ஆகியன மூலம் பாடல்களைப்
பாடி தமது திறமையைக் காட்டினார்.
பின்னர் மாற்றுத் திறனாளி குழந்தைகளின் கலை
நிகழ்ச்சிகளும், அவர்களுக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றது. இதில்
அவர்கள் மிகவும் ஆர்வத்தோடும், மிகிழ்வோடும் பங்கேற்றது காண்பவர் அனைவரையும் மகிழ்வடையச்
செய்தது. பின்னர் பங்கேற்ற அனைவருக்கும் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக