எமது பள்ளி உயர் துவக்கப் பள்ளியில் இருந்து உயர்நிலைப் பள்ளியாக தமிழக அரசால் தரம் உயர்த்தப்பட்டதை அடுத்து இன்று (15.12.2012)புதிய பள்ளியின் துவக்க விழா இனிதே நடைபெற்றது. விழா தற்போதைய உயர் துவக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. செ.இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக பள்ளி துவக்க விழாவிற்கான சிறப்பு பூசை நடைபெற்றது. பின்னர் புதிய பள்ளியின் பொருப்பாசிரியர் திருமதி சி. தாமரைச்செல்வி அவர்கள் விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றார்.பின்னர் தற்போதைய பள்ளியின் தலைமை ஆசிரியரின் தலைமை உரையில் இன்றைய புதிய பள்ளி துவக்கத்திற்கான பல்வேறு கடந்த காலச் செயல்பாடுகள் பற்றி விரிவாக எடுத்துக் கூறி இப்பள்ளி மேல்நிலைப் பள்ளியாக வளர்ச்சி கண்டு, மாணவர்களுக்கான தங்கும் விடுதியோடு செயல்பட வேண்டுமென தமது வாழ்த்தைக் கூறினார். அடுத்து பேசிய புதிய உயர்நிலைப் பள்ளியின் பொறுப்புத் தலைமை ஆசிரியர் திரு டி. சீனிவாசன் அவர்கள் புதிய பள்ளி எவ்வாரெல்லாம் செயல்பட வேண்டுமெனக் கூறினார். பின்னர் தற்போதைய மூன்றம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவரும் கிராமக் கல்விக் குழுத் தலைவருமான திருமதி உஷாராணி குமரேசன், முன்னாள் தலைவர்கள் திரு இராதா நாகராசன், திரு வி. மாதவன்,மற்றும் உராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் வாழ்த்துரக்குப் பின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு வே. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் சிறப்புரையுடன் விழா இனிதே நிறைவடைந்தது. விழாவில் புதிய பள்ளிக்கான மாணவர் சேர்க்கையும் நடைபெற்றது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக