செவ்வாய், 15 நவம்பர், 2011

கல்வி உரிமைநாள் விழா.........

               எமது பள்ளியில் சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரும், இந்தியாவிற்கு தனியான ஒரு கல்விமுறை வேண்டும் என்று பாடுபட்டவருமான மாண்புமிகு  மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின் பிறந்த நாள் கல்வி உரிமை நாள் விழாவாக நடைபெற்றது.
                   அப்போது பள்ளித்தலைமை ஆசிரியரால் மாண்புமிகு  மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின் வாழ்க்கை, சேவைகள் மற்றும் இந்திய கல்வி முன்னேற்றத்திற்கு அவர் ஆற்றிய பணிகள் பற்றி விரிவாகக் கூறப்பட்டது.
                பின்னர் அன்னாரின் பிறந்தநாள் விழாத் தொடர்பாக இந்தியப் பிரதமர் மாண்புமிகு மன்மோகன் சிங், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் மாண்புமிகு கபில் சிபல், தமிழக முதல்வர் மாண்புமிகு ஜெ. ஜெயலலிதா ஆகியோர் அனுப்பி வைத்திட்ட கடிதங்கள் மாணவர்களுக்கு படித்து காண்பிக்கப்பட்டது.





1 கருத்து: