எமது பள்ளி மாணவர்களை களப் பயணமாக ஊத்தங்கரை அழைத்துச் சென்றோம். அப்போது முதலாவதாக பார்வையிட்ட இடம் தீயனைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையம் அங்கு நிலைய அலுவலர்கள் மிகச் சிறப்பான முறையில் செயல் விளக்கம் அளித்தனர். அப்போது அவர்களின் பணி மற்றும் அதற்காகப் பயன்படுத்தும் கருவிகள் பற்றியும் சிறப்பாக விளக்கினர். பின்னர் காவல் நிலையம் சென்ற மாணவர்களுக்கு அங்கிருந்த காவல் துணை ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் மிகச் சிறப்பாக வரவேற்று அவர்களின் பல்வேறு பணி நிலைகள் பற்றியும் பொறுப்புகள் பற்றியும் எடுத்துக் கூறியதோடு அவர்கள் பயன்படுத்தும் துப்பாக்கி, கைத்துப்பாக்கி, கம்பியில்லா தொலைபேசிக் கருவியான ஒயர்லஸ், வாக்கிடாக்கி ஆகியவற்றைக் காட்டி செயல் முறை விளக்கமளித்தனர். அடுத்ததாக பாரத ஸ்டேட் வங்கிக்குச் சென்ற பொழுது அங்கே வங்கியின் பல்வேறுபட்ட சேவைகள் மற்றும் பொது மக்களோடு உள்ளத் தொடர்பு ஆகியவை பற்றி வங்கி அலுவலர் விளக்கினார். அடுத்து கணினி நூலகம் சென்று அங்கு உள்ள 30க்கு மேற்பட்ட கணினிகளை ஒரே இடத்தில் பார்த்து வியந்தனர். மேலும் அங்கு இருந்த போட்டித் தேர்வுகளுக்கான நூல்களையும் பார்வையிட்டனர். அடுத்து அரசு பொது நூலகம் சென்ற போது அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களையும் அவை கதை, கட்டுரை நாவல், கவிதை, பொது அறிவு, வரலாறு, இலக்கியம் போன்ற பிரிவுகளில் வகைப்படுத்தப்பட்டிருந்தக் காட்சி மாணவர்களைக் கவர்ந்தது. இக் களப் பயணம் மூலம் மாணவர்கள் மிகப் பல செய்திகளை செயல் முறை விளக்கங்களோடு நேரிடையாக கற்றுககொண்டமை பயனுள்ளதாக அமைந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக