வெள்ளி, 25 டிசம்பர், 2009

பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம் கொட்டுகாரம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (௨௩.௧௨.௨௦௦௯?) ல் பள்ளியின் சிறப்பு பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் அதன் தலைவர் திரு கே.பி.திருவேங்கடம் தலைமையில் நடை பெற்றது. கூட்டத்தில் முன்னதாக பள்ளியின் தலைமையாசிரியர் திரு. செஇராஜேந்திரன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். அப்போது அவர் தற்போது உள்ள நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்துவதற்கான கருத்துருக்களை தற்போது தயாரித்து அனுப்ப வேண்டியதன் அவசியம் பற்றியும், அதற்காக புதிதாக அமைக்கப்பட வேண்டிய பள்ளி கட்டிடக் குழு பற்றியும், பெற்றொர்களும் பொது மக்களும் அளிக்க வேண்டிய ஒத்துழைப்பு பற்றியும் விரிவாக எடுத்துக் கூறினார்.
               கூட்டத்தில் கலந்துக்கொண்ட கிராமக் கல்விக் குழுத் தலைவரும், ஊராட்சி மன்றத் தலைவருமான இராதா நாகராஜ் அவர்கள் பல்வேறு ஆக்கபூர்வமான கருத்துரைகள் வழங்கிய பின் கூட்டத்தில் கலந்துக்கொண்ட மற்ற உறுப்பினர்கள் மற்றும் பொருப்பாளர்களின் கருதுரைக்குப் பின் கீழ்க்கண்ட முடிவுகள் ஒருமனதாக எடுக்கப்பட்டது.
தீர்மானம் :   1
      நமது கிராமத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக உயர்த்திட கருத்துருக்களை தயார் செய்து தலைமையாசிரியர் மூலம் அனுப்பி வைத்திடல்.
தீர்மானம் : 2
    அரசாங்கத்தால் உயர்நிலைப் பள்ளி ஒதுக்கீடு செய்திடும் நிலையில் அப்பள்ளிக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தல்.
தீர்மானம் : 3
      புதிய உயர்நிலைப் பள்ளியின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு ஒருமனதாக அமைக்கப்பட்ட கீழ்க் கண்ட பள்ளி கட்டிடக் குழுவிற்கு ஒப்புதல் அளித்து அக்குழு சிறப்பாகச் செயல்பட தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தல்.

  புதிதாக அமைக்கப்பட்ட கட்டிடக் குழு விபரம் :
தலைவர் :                                   திரு. கோ.மோகன் நாயுடு
துனைத் தலைவர் :                திரு.கே.எம். எத்திராஜ்
செயலாளர் :                               திரு.கேபி.திருவேங்கடம்
துணைச் செயலாளர் :           திரு. சி.காந்தி
பொருளாளர் :                             திரு. வே.மாதவன்.
      
             கூட்டத்தில் முன்னாள் உராட்சித் தலைவர் மாதவன் உள்ளிட்ட பெற்றோர்கள் பெருமளவில் கலந்துக்கொண்டனர்.
                  இறுதியில் உதவி ஆசிரியர் திரு சே. லீலாகிருஷ்ணன் அனைவருக்கும் நன்றி கூறினார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக