சனி, 7 ஜனவரி, 2012

கிராமக் கல்விக்குழு நாள் விழா


 
                  

                         ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கிராமக் கல்விக்குழு நாள் விழா நடைபெற்றது. விழாவிற்கு கிராமக் கல்விக் குழுத் தலைவர் திரு. டி.பூபதி தலைமை தாங்கினார். முன்னதாக வரவேற்புரை ஆற்றிய பள்ளித் தலைமை ஆசிரியர் திரு. செ. இராஜேந்திரன் தற்போதைய பள்ளியின் நிலைப்பாடு பற்றியும், இனி வருங்காலங்களில் செயல்படுத்தப்பட உள்ள கல்வி மற்றும் இதர செயல்பாடுகள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார். விழாவில் ஊத்தங்கரை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திரு இரா. நாகராஜு, கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திரு கொ.மா. சீனிவாசன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திருமதி பத்மா உள்ளிட்ட பொறுப்பாளர்களும் பெற்றோர்களும் கலந்துக்கொண்டனர். நிகழ் ச்சியில் 1 முதல் 8 வகுப்பு வரை உள்ள மாணவர்கள் தத்தமது தனித்திறமைகளை வெளிக்காட்டும் வகையில் ஆங்கில செய்தித் தாள் வாசித்தல், ஆங்கிலத்தில் உரையாடுதல்,ஆங்கிலத்தில் கவிதை வாசித்தல், செயல்வழிக் கல்வி அட்டைகளை ஆங்கிலம் மற்றும் தமிழில் வாசித்தல் படம் வரைந்துக் காட்டுதல் அறிவியல் வினாடி - வினா நிகழ்வில் பங்குபெறல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நிகழ்த்திக் காட்டினர். நிகழ்வில் பங்கு பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இவை அனைத்தும் பள்ளிப் பெற்றோர்களின் முன்னிலையில் நடைபெற்றமையால் பெற்றோர்கள் அனைவரும் மிக்க மகிழ்வோடும் தமது குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் மிகச் சிறப்பான கல்வியைப் பெறுகிறார்கள் என்ற திருப்தியோடும் சென்றனர். இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் திருமதி வி. கஸ்தூரி நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி உதவி ஆசிரியர்கள் திருமதி      சு. சாரதா, திருமதி இலட்சுமி, திரு வி. வஜ்ரவேல் ஆகியோர் செய்தனர்.
2 கருத்துகள்: