திங்கள், 1 பிப்ரவரி, 2010

பள்ளிச் சிறார் கண்ணொளி காப்போம் திட்டம்.                  எமது பள்ளியில் இன்று 01.02.2010 மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர். கலைஞர் பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டத்தின் சார்பில் பார்வைக் குறைபாடுடைய பள்ளி மாணவர்களுக்கான ”இலவச கண்ணாடிகள் வழங்கும் விழா” பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு கிராமக் கல்விக் குழு தலைவரும், மூன்றம்பட்டி ஊராட்சி தலைவருமான திரு இராதா நாகராஜன் அவர்கள் தலைமை தாங்கினார். முன்னதாக பள்ளித் தலைமையாசிரியர் திரு செ. இராஜேந்திரன் அனைவரையும் வரவேற்றார். அவர் தனது வரவேற்புரையில் பள்ளிச் சிறார் கண்ணொளி காப்போம் திட்டம் பற்றியும் அதன் மூலம் மாணவர் பெறும் நண்மைகள் பற்றியும் அரசால் தற்போது வழங்கப்பட்டுள்ள தரமான கண்ணாடிகளின் பாதுகாப்பு முறைகள் பற்றியும் தெளிவாக எடுத்துரைத்தார்.
                           விழாவில் பள்ளிப் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திரு கே.பி . திருவேங்கடம், கட்டிடக் குழுத் தலைவர் திரு மோகன். துனைத் தலைவர் திரு கே.எம். எத்திராசு உள்ளிட்டோரின் வாழ்த்துரைக்குப் பின் மாணவர்களுக்கு இலவச கண்ணாடிகள் வழங்கப்பட்டது. இறுதியில் உதவி ஆசிரியை திருமதி சி.தாமரைச்செல்வி அனைவருக்கும் நன்றி கூறினார்.
                    விழாவிற்கான ஏற்பாடுகளை உதவி ஆசிரியர்கள் திரு சி.சிவா, திரு சே.லீலாகிருஷ்ணன், திரு.ந. இராஜசூரியன் ஆகியோர் செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக