சனி, 21 ஏப்ரல், 2018

2017 – 18 கல்வியாண்டு நிறைவு நாள் விழா.......ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (19.04.2018) ” 2017 – 18  கல்வியாண்டு  நிறைவு  நாள்  விழா நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ.இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் முன்னதாக பள்ளி உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி அனைவரையும் வரவேற்றார்.
பள்ளித் தலைமை ஆசிரியர் தமது தலைமை உரையில் அரசுப் பள்ளிகளில் அனைத்து குழந்தைகளும் சேர்ந்து  படிப்பதால் ஏற்படும் நண்மைகள் பற்றி விரிவாக எடுத்துக் கூறியதோடு, வாழ்க்கையோடு இணைந்த கல்வி அரசுப்பள்ளிகளில் மட்டுமே வழங்கப்படுகிறது என்பதை வலியுறுத்திக் கூறினார். தமது பள்ளியில் மாணவர்களின் பன்முகத் திறன்களை வளர்ப்பதற்காக மேற்கொள்ளப்படும் சிறப்பு பயிற்சிகள் பற்றியும் கற்றல் கற்பித்தலில் தமது பள்ளியில் நடைமுறைப் படுத்தப்படும் சிறப்பு கல்வி தொழிற் நுட்பங்கள் குறித்தும் தெளிவாக விளக்கினார்.
அடுத்த கல்வியாண்டில் வரப்போகும் புதிய பாடப்புத்தகம் குறித்தும் அதில் வழங்கப்பட்டுள்ள கல்வி தொழிற்நுட்பங்கள் பற்றியும் விரிவாக எடுத்துக் கூறினார்.
பின்னர் இவ்வாண்டு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று உயர்நிலைப் பள்ளிக்குச் செல்லும் அனைத்து மாணவர்களும் இப்பள்ளியில் கல்வி, கேள்வி, ஒழுக்கத்தில் சிறந்து விளங்கியது போல் அங்கும் சிறப்பு பெற வேண்டும் எனக் கூறி வாழ்த்தினார். அனைத்து மாணவர்களுக்கும் நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டது.

விழாவில் உதவி ஆசிரியர்கள் திருமதி ந. திலகா, த. லதா, வே. வஜ்ஜிரவேல்  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாணவர்கள் பலரும் தமது கருத்துக்களை பகிர்ந்துக் கொண்டனர்
இறுதியில் எட்டாம் வகுப்பு மாணவி சி. விஷ்ணுபிரியா அனைவருக்கும் நன்றி கூறினார்.


வெள்ளி, 20 ஏப்ரல், 2018

மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு முகாம் 2018


ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (20.04.2018) ” மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ.இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற முகாமில் முன்னதாக பள்ளி உதவி ஆசிரியர் திரு வே. வஜ்ஜிரவேல் அனைவரையும் வரவேற்றார்.
பள்ளித் தலைமை ஆசிரியர் தமது தலைமை உரையில் அரசுப் பள்ளிகளில் அனைத்து குழந்தைகளும் சேர்ந்து  படிக்க வேண்டியதன் அவசியம் பற்றியும். அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் பன்முகத் திறன்களை வளர்ப்பதற்காக மேற்கொள்ளப்படும் சிறப்பு பயிற்சிகள் பற்றியும் கற்றல் கற்பித்தலில் தமது பள்ளியில் நடைமுறைப் படுத்தப்படும் சிறப்பு கல்வி தொழிற் நுட்பங்கள் குறித்தும் தெளிவாக விளக்கினார்.
முகாமில் ஒன்றிய வளமைய ஆசிரியப் பயிற்றுநர் திரு பா. சிவப்பிரகாசம் அவர்கள் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துக் கொண்டு மாணவர் சேர்க்கை தொடர்பான பல கருத்துக்களை வழங்கினார்.
முன்னதாக பள்ளி எல்லைக்குட்பட்ட கிராமமான ஜோதிநகரின் முக்கிய பகுதிகள் அனைத்திற்கும் மாணவர்களும் ஆசிரியர்களும் ஊர்வலமாகச் சென்று அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்க வேண்டியதன் அவசியம் குறித்தும் அனைத்து பள்ளி வயதுக் குழந்தைகளும் பள்ளியில் சேர்க்க வேண்டியதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு வாசகங்களை கூறி பேரணி நடத்தினர்.
முகாமில் உதவி ஆசிரியர்கள் திருமதி ந. திலகா, த. லதா ஆகியோரும் கலந்துக் கொண்டனர்

இறுதியில் உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி அனைவருக்கும் நன்றி கூறினார்.