செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

சர்வதேச தாய்மொழி நாள் விழா



இன்று 21.02.2017 செவ்வாய்க்கிழமை எமது பள்ளியில் பள்ளி தமிழ் இலக்கிய மன்றம் சார்பில் சர்வதேச தாய்மொழி நாள் விழா கொண்டாடப்பட்டது.
பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில், முன்னதாக பள்ளி உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி அனைவரையும் வரவேற்றார்.  பின்னர் பள்ளி உதவி ஆசிரியர் திருமதி ந. திலகா, திருமதி அ. நர்மதா ஆகியோர் தாய்மொழியின் அவசியம், சிறப்பு குறித்து கருத்துரை வழங்கினர்.   
பள்ளித் தலைமை ஆசிரியர் டிரு செ. இராஜேந்திரன் அவர்கள் தமது தலைமை உரையில் இன்று உலகம் முழுமையும்  கொண்டாடப்பட்டு வரும் சர்வதேச தாய்மொழி நாள் குறித்தும், அதற்கான அவசியம், காரணம் மற்றும் இந்நாள் கொண்டாடப்படுவதன் அடிப்படை வரலாறு குறித்தும் விரிவாக பேசியதோடு, அனைவரும் தாய்மொழி வழியில் கல்வி கற்பதோடு, தாய்மொழி வளர்ச்சிக்கு பாடுபட வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
முன்னதாக பள்ளி மாணவர்கள் தாய்மொழியின் அவசியம் மற்றும் தாய்மொழி வழிக் கல்வி கல்வி குறித்து சிறப்பாக பேசினர்.
அதன் பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது..
                இறுதியில் உதவி ஆசிரியர் திரு வே. வஜ்ஜிரவேல் அனைவருக்கும் நன்றி கூறினார்.



















வியாழன், 26 ஜனவரி, 2017

68 வது இந்திய குடியரசு தின விழா


ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (26.01.2017) 68வது இந்திய குடியரசு தினவிழா நடைபெற்றது.
முன்னதாக காலை சரியாக 9.00 மணிக்கு பள்ளியில் இந்திய தேசியக் கொடியை பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் ஏற்றி வைத்தார்.
பின்னர் நடைபெற்ற குடியரசு தின விழாவிற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமை தாங்கினார். பள்ளி உதவி ஆசிரியர் திருமதி திருமதி நா. திலகா அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.
பள்ளி உதவி ஆசிரியர்கள், திருமதி த. லதா, திரு வே. வஜ்ஜிரவேல் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தமது தலைமை உரையில் இந்திய குடியரசு தின விழாவின் சிறப்பு குறித்தும், இவ்விழா நடத்தப்படுவதன் காரணம் குறித்தும் விரிவாக விளக்கியதோடு நமது நாட்டின் விடுதலைக்கு பாடுபட்ட தலைவர்கள் பற்றியும் அவர்கள் நாட்டுக்குச் செய்த தியாகங்கள் குறித்தும் கூறி அதுபோல மாணவர்களும் சமுதாயத் தொண்டு ஆற்றவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
பின்னர் மாணவர்கள் இந்தியக் குடியரசு தின விழா குறித்து உரையாடினர், மேலும் தேசபக்திப் பாடல்களைப் பாடினர், அடுத்து   தேசபக்திப் பாடல்கள் பாடும் போட்டி, பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி   ஆகியவற்றில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் திருமதி அ. நர்மதா அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார்.
விழாவில் பள்ளி சத்துணவு அமைப்பாளர் திரு பீமன் உள்ளிட்ட பெற்றோர்கள் கலந்துக்கொண்டனர். 





























தேசியத் திறனாய்வுத் தேர்வு சிறப்புப் பயிற்சி முகாம் நிறைவு விழா




ஊத்தங்கரை ஊராட்சி துவக்கப் பள்ளியில் இன்று 25.01.2017 ல் தேசியத் தினாய்வுத் தேர்வுக்கான சிறப்புப் பயிற்சி முகாம் நிறைவு விழா சிறப்பாக நடைபெற்றது.
ஊத்தங்கரை கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திருமதி த. மகேஸ்வரி அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிறைவு விழாவில், ஜோதிநகர் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். அப்போது அவர் தமது உரையில் பயிற்சி முகாமின் நோக்கம் மற்றும் பயிற்சி முகாமில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் மிகச்சிறப்பாக செயல்பட்டனர் எனக் கூறியதோடு, இப்பயிற்சி முகாமில் 12 மனத் திறனறித் தேர்வையும் 11 பாடத் திறனறித் தேர்வையும் எழுதி உள்ளதை சுட்டிக்காட்டி, மிகச் சிறப்பாக நடைபெற்ற பயிற்சி தற்போது நடைபெற உள்ள தேர்வுக்கு மட்டுமல்லாது பிற்கால போட்டித் தேர்வுகளுக்கும் பயன்படும் எனக் கூறி இப்பயிற்சி முகாமுக்கு பல்வேறு உதவிகளை வழங்கியவர்களை நினைவு கூர்ந்து அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறி விழாவிற்கு வருகை புரிந்துள்ள அனைவரையும் வரவேற்றார்..
 விழாவில் ஊ.ரெட்டிப்பட்டி தலைமை ஆசிரியர் திரு மா. கிருஷ்ணமூர்த்தி, ஒட்டம்பட்டி தலைமை ஆசிரியர் திரு கி. ஞானசேகரன், பாம்பாறுஅணை தலைமை ஆசிரியர் திரு மு. மோகன்குமார், கெண்டிகானூர் தலைமை ஆசிரியர் திரு சி.என். பழனி, அப்பிநாயகன்பட்டி தலைமை ஆசிரியர் திருமதி செல்வமணி ஆகியோர்,  வாழ்த்துரை வழங்கினர்.
பயிற்சி அளித்த ஆசிரியர்களான திரு இரா. சசிக்குமார், திரு விஜயன், திரு கலைச்செல்வன், திரு அருண்குமார் ஆகியோர் கருத்துரை வழங்கினர்
, தொடர்ந்து சிறப்பு விருந்தினராகக் கலந்துக் கொண்ட ஸ்ரீ வித்யா மந்திர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் திரு வே. சந்திரசேகரன் அவர்கள் மாணவர்களுக்கு பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி மாணவர்களுக்கா அறிவுரைகளைக் கூறி  சிறப்புரை ஆற்றினார்.
இன்றைய பயிற்சி முகாமில் ஊத்தங்கரை ஒன்றியத்தைச் சார்ந்த 18 பள்ளிகளில் இருந்து 160 மாணவர்கள் மற்றும் அப்பள்ளிகளின் ஆசிரியர்கள் கலந்துக்கொண்டனர்.
இறுதியில் ஆசிரியர் திரு ஸ்ரீதர் அனைவருக்கும் நன்றி கூறினார்.