ஊத்தங்கரை ஒன்றியம் ,ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய
நடுநிலைப் பள்ளியில் இன்று 25.01.2017 ல் தேசிய
வாக்காளர் விழிப்புணர்வு தினவிழா சிறப்பாக நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன்
அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் முன்னதாக உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி
அனைவரையும் வரவேற்றார்.
தலைமை ஆசிரியர் தமது தலைமை உரையில் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு தினம் தொடர்பான
பல்வேறு செய்திகளையும், இவ்விழாவின் அவசியம் குறித்தும் விரிவாகக் கூறி, வாக்காளர்கள்
மத, இன, மொழி வேறுபாடுகள் பாராமலும், சுதந்திரமாகவும் வாக்களிக்க வேண்டுமெனவும் கேட்டுக்
கொண்டார்.
முன்னதாக பள்ளியில் அனைத்து ஆசிரியர்களும்,
மாணவர்களும் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றனர்.
விழாவில் உதவி ஆசிரியர்கள் திருமதி நா. திலகா,
திருமதி த. லதா திருமதி அ. நர்மதா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
இறுதியில் உதவி ஆசிரியர் திரு வே. வஜ்ஜிரவேல்
அனைவருக்கும் நன்றி கூறினார்.