வியாழன், 15 அக்டோபர், 2015

உலக கைகள் கழுவும் நாள் விழா - 2015



இன்று 15.10.2015 வியாழக்கிழமை எமது பள்ளியில் பள்ளி சுற்றுச் சூழல் மன்றம் சார்பில் உலக கைகள் கழுவும் நாள்  கடைபிடிக்கப்பட்டது.

முன்னதாக காலையில் பள்ளி வளாகம் முழுமையும் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களால் தூய்மை செய்யப்பட்டது.

பின்னர் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற உலக கைகள் கழுவும் நாள்  நிகழ்வு நடைபெற்றது. அதில் பள்ளித் தலைமை ஆசிரியர் தமது தலைமை உரையில் இன்று உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும்  உலக கைகள் கழுவும் நாள்  கடைபிடிக்கப்படுவது குறித்தும், அதற்கு காரணம் மனிதர்களுக்கு பரவும் பல்வேறு வகையான நோய்களுக்கும், குறிப்பாக வயிற்றுப்போக்குக்கும் சரியாக கைகள் கழுவாமல் உணவு உட்கொள்வதுதான் என்பது குறித்தும் விரிவாக பேசியதோடு அனைவரும் எவ்வாறு கைகளை கழுவ  வேண்டும் என செய்துக்காட்டி, இதே முறையில் தினமும் அனைவரும் கைகளைக் கழுவ வேண்டும்  எனவும் கேட்டுக்கொண்டார்.
பின்னர் 1 முதல் 8 வரையில் பயிலும் மாணவர்கள் பலர் தாமாக முன்வந்து கைகளை கழுவும் முறைகளை விளக்கி அனைவருக்கும் செய்து காட்டினர்.
நிகழ்வில் உதவி ஆசிரியர்கள் திருமதி த. இலதா, திருமதி நா. திலகா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.






















புதன், 14 அக்டோபர், 2015

கொடுப்பதில் மகிழ்வு வாரவிழா - 2015




      ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கொடுப்பதில் மகிழ்வு வாரவிழா நடைபெற்றது.
     பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள்  தலைமையில் நடைபெற்ற விழாவில் பள்ளி உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி அவர்கள் அனைவரையும் வரவேற்றார். விழாவில் பள்ளித்தலைமை ஆசிரியர் அவர்கள் தமது உரையில் நாம் அடுத்தவரிடம் பெறும் போது அடையும் மகிழ்ச்சியைவிட, அடுத்தவர்களுக்கு கொடுக்கும்போது இரட்டிப்பு மகிழ்ச்சி அடைய வேண்டும். என அனைத்து மாணவர்களிடமும் கேட்டுகொண்டார். மேலும் அடுத்தவர்களுக்கு உதவிடும் மனப்பான்மையை இளம் வயதிலேயே வளர்த்துக்கொள்ள வேண்டியே இதுபோன்ற விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது எனக்கூறி அனைத்து மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பரிசுப் பொருட்களை வழங்கினார்.
          அதனைத் தொடர்ந்து மாணவர்கள் தாம் கொண்டுவந்த/தயாரித்துவந்த பரிசுப் பொருட்களை தமக்குப் பிடித்த மாணவ நண்பர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் வழங்கி தமது மகிழ்ச்சியை பகிர்ந்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சி பார்ப்போர் அனைவரையும் கவர்வதாய் அமைந்தது.
            விழாவில் பள்ளி உதவி ஆசிரியர்கள் திருமதி த. லதா, திருமதி நா. திலகா ஆகியோரும் கலந்துக் கொண்டனர்.
          இறுதியில் உதவி ஆசிரியர் திரு வே. வஜ்ஜிரவேல் அனைவருக்கும்  நன்றி கூறினார்.