சனி, 11 ஜூலை, 2015

உலக மக்கள் தொகை நாள் விழா



இன்று 11.07.2015 சனிக்கிழமை ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் உலக மக்கள்தொகை நாள்விழா நடைபெற்றது.

 பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் உலக மக்கள்தொகை நாள் விழா  நடத்துவதன் அவசியம் பற்றியும் உலகில் மக்கள் தொகை அதிகரிப்பதால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் விரிவாக எடுத்துக்கூறி, இன்று உலகம் முழுமையும் உள்ள அனைத்து நாடுகளும் இந்நாளை  கடைபிடிப்பது பற்றியும் எடுத்துக்கூறினார்.

பின்னர் பள்ளி மாணவர்களை இந்திய நிலவரைபடம் போல அமரவைத்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் காணும் மக்கள் தொகை எண்ணிக்கை, மக்கள் தொகை நெருக்கம் பற்றியும் இதன் விளைவாக அங்கு ஏற்பட்டுள்ள இடர்பாடுகள் மற்றும் பற்றாக்குறை பற்ரியும் விவாக எடுத்துக்கூறப்பட்டது.
பின்னர் முதல் 5 வகுப்புகள் வரையில் ஒரு பிரிவாகவும் 6 முதல் 8 வகுப்புகள் வரையில் ஒரு பிரிவாகவும் பிரிக்கப்பட்டு அவர்களுக்கு மக்கள்தொகை விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டது. அப்போது மாணவர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்தினர்.

அதன் பின்னர் போடிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் உதவி ஆசிரியர்கள் திருமதி மு. இலட்சுமி, திருமதி த. லதா, திரு வே. வஜ்ஜிரவேல் திருமதி அ. நர்மதா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.












வெள்ளி, 10 ஜூலை, 2015

எமது பள்ளியின் இன்றைய (10.07.2015) கற்றல்/கற்பித்தல் மற்றும் வகுப்பறைச் செயல்பாடுகள்


























எனது தூய்மைப்பள்ளி, பசுமைப்பள்ளி...........

              இன்று (10.07.2015) எமது பள்ளியின் தோற்றம், இப்பள்ளி பசுமைப் பள்ளியாகவும், தூய்மைப் பள்ளியாகவும் இருக்க வேண்டும் என்பதில் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய செயல்பாடுகள் மிக அதிகம்.