வெள்ளி, 27 பிப்ரவரி, 2015

ஆழ்ந்த இரங்கல்..........


           கடந்த ஓராண்டுக்கும் மேலாக தொடர் மருத்துவ சிகிச்சையில் இருந்தாலும், பள்ளிப்படிப்பு பாதியில் நின்று விடக்கூடாது எனக் கருதி
மாதம் 4,5 நாட்களாவது பள்ளிக்கு வரவழைத்து அவரின் கல்வி ஆர்வத்தை மங்கிட விட்டிடாமல் தொடர் முயற்சி மேற்கொண்ட
எங்களின் அத்தனை செயல்பாடுகளையும் அர்த்தமற்றதாக்கி விட்டு ...
நேற்று (26..02.2015) இவ்வுலகை விட்டோ பிரிந்து எங்கோ வேறிடத்திற்கு சென்று விட்ட
எமது பள்ளி 3ம் வகுப்பு மாணவி ச. பவாணியின்
ஆன்மா அமைதி பெறவும், அவரை பிரிந்து வாடும் அவரின் குடும்பம் ஆறுதல் அடையவும்
எமது பள்ளியின் சார்பில் ஆழ்ந்த வருத்தத்தை இதன் மூலம் பதிவு செய்வதைத் தவிர
வேறு எதையும் செய்ய இயலா கையறு நிலையில் நான்..........

புதன், 18 பிப்ரவரி, 2015

இளைஞர் செஞ்சிலுவைச் சங்க கண்காட்சியில் எமது மாணவர்கள்





இன்று ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் நடைபெற்ற இளைஞர் செஞ்சிலுவைச் சங்க  (JRC) நிழற்படக் கண்காட்சியில் எமது பள்ளி இளைஞர் செஞ்சிலுவைச் சங்க மாணவர்கள் கலந்துக்கொண்டனர்.   
முன்னதாக, ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் திரு பொ. பொன்னுசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்ற கண்காட்சி துவக்க விழாவில் பள்ளியின் இளைஞர் செஞ்சிலுவை சங்க பொருப்பாசிரியர் திரு கு. கணேசன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். ஊத்தங்கரை அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் திருமதி ஷோபா திருமால் முருகன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துக்கொண்டார்.  ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள், ஊத்தங்கரை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் திரு அ. யுவராஜ் அவர்கள், பணி நிறைவுபெற்ற மருத்துவப் பணிகள் துணை இயக்குனர் திரு க. தேவராஜ் அவர்கள், ஊத்தங்கரை அதியமான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நிர்வாக அலுவலர் திரு சீ. கணபதிராமன் அவர்கள், கஞ்சனூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் திரு. இரா. வீரமணி அவர்கள், ஊத்தங்கரை வட்ட செஞ்சிலுவைச் சங்க  துணைத் தலைவர் திரு இரா. க. இராஜா அவர்கள், செயலாளர் நேசம் குணசேகரன் அவர்கள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இறுதியில் கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர் செஞ்சிலுவைச் சங்க   கண்வீனர் திரு ப. பண்ணீர்செல்வம் அவர்கள் மாணவர்களுக்கான சங்கச் செயல்பாடுகள் பற்றி விரிவாக எடுத்துக்கூறினார்.
கண்காட்சியில் இப்பள்ளி செஞ்சிலுவைச் சங்க மாணவர்கள் மற்றும் ஆசிரியர் திரு கு. கணேசன் ஆகியோரின் பொதுச் சேவைகளை வெளிப்படுத்தும் நிழற்படங்கள் மற்றும் செய்தித் தாட்களில் வெளிவந்த செய்திகளின் துண்டறிக்கைகள் ஆகியன காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. இதனைக் கண்ட அனைவருக்கும் தாமும் இதுபோன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டு பொதுச் சேவையாற்ற வேண்டுமென்ற ஆவலைத் தூண்டி இருக்கும் என்றால் அது மிகை ஆகாது.  




















செவ்வாய், 13 ஜனவரி, 2015

பள்ளியில் பொங்கல் விழா..........


இன்று ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடாப்பட்டது.
முன்னதாக பள்ளி மாணவர்கள் பள்ளி வளாகத்தை தூய்மை செய்து அழகிய கோலமிட்டனர். பின்னர் தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் விழா பள்ளியில் மிகவும் மகிழ்வுடன் கொண்டாடப்பட்டது.
விழாவில் பள்ளித் தலைமை ஆசிரியர் செ. இராஜேந்திரன், உதவி ஆசிரியர்கள் மு. இலட்சுமி, . இலதா, வே. வஜ்ஜிரவேல், . நர்மதா, சத்துணவு அமைப்பாளர் பீமன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.