செவ்வாய், 7 அக்டோபர், 2014

விலையில்லா பாட நூல்கள் வழங்கல்




ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (07.10.2014) பள்ளி மாணவர்களுக்கான விலையில்லாப் பொருட்கள் வழங்கப்பட்டது.
2014 – 2015 ம் ஆண்டுக்கான இரண்டாம் பருவ விலையில்லாப் பொருட்கள் வழங்கும் விழா பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அதில் 1 முதல் 8 வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் விலையில்லா பாடநூல்கள், பாடக் குறிப்பேடுகள், மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டது. விழாவில் உதவி ஆசிரியர்கள் திருவாளர்கள் மு. இலட்சுமி, இரா. முரளி, வே. வஜ்ஜிரவேல், அ. நர்மதா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.














திங்கள், 8 செப்டம்பர், 2014

முப்பெரும் விழா



ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று 08.09.2014 ல் உலக எழுத்தறிவு தினவிழா, ஆசிரியர் தின விழா, டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெற்ற பள்ளித் தலைமை ஆசிரியருக்கு பாராட்டுவிழா உள்ளிட்ட முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது.
     ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு ப. பொன்னுசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் முன்னதாக பள்ளி உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி அனைவரையும் வரவேற்றார். விழாவில் ஊத்தங்கரை ஒன்றிய வளமைய மேற்பார்வையாளர் திரு கா. நேரு, சிறப்பு விருந்தினராகக் கலந்துக்கொண்டார். ஆசிரியப் பயிற்றுனர்கள் திருமதி இரா. வசந்தி, திரு இரா. இராஜா, திரு சி. சிவலிங்கம் மற்றும் ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இளைஞர் செஞ்சிலுவைச் சங்க ஆசிரியர் திரு கு. கணேசன்,  பள்ளி உதவி ஆசிரியர்கள் வே வஜ்ஜிரவேல், அ. நர்மதா ஆகியோர் கலந்துக்கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.   
விழாவில் பேசிய மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்களின் சீரிய கற்பித்தல் பணி, நிர்வாகத் திறமை. அனைவரிடமும் பழகும் விதம் மற்றும் மற்றவர்களுக்காக உதவும் பண்பு ஆகியவை குறித்து விரிவாகப் பேசினர்.
பின்னர் தமது பள்ளி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின பரிசுகளை வழங்கிய பின் ஏற்புரை வழங்கிய பள்ளித் தலைமை ஆசிரியர்  திரு செ .இராஜேந்திரன் அவர்கள் தமக்கு வழங்கப்பட்டுள்ள விருதை தமது உதவி ஆசிரியர்கள் அனைவருக்கும் சமர்ப்பனம் செய்வதாகக் கூறினார்.
இறுதியில் உதவி ஆசிரியர் திரு இரா. முரளி அனைவரூகும் நன்றி கூறினார்.


























சனி, 6 செப்டம்பர், 2014

நான் பெற்ற டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது - ஓர் பார்வை



தமிழக அரசு ஆசிரியர்களுக்கு வழங்கும் 2013 - 14 ம் ஆண்டுக்கான டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது எனும் நல்லாசிரியர் விருது 05.09.2014ல் பெற்றேன். இவ்விருதால் எனக்கு கிடைக்கப் போகும் பெருமை அத்தனையும், இவ்விருது எனக்கு இன்று அறிவிக்கப்பட காரணமாய் அமைந்திட்ட எமது ஒன்றிய உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திரு இரா. பிரசாத் அவர்களுக்குதான் முழுமையாக சென்று சேரவேண்டும்.
ஆம், விருதுக்கு விண்ணப்பக் கருத்துருக்கள் ஒருபோதும் தயாரித்து வழங்க மாட்டேன் எனும் மன உறுதியோடு இருந்த எனக்கு, விருத்துக்கான கருத்துருக்கள் தயாரித்து வழங்கியே ஆக வேண்டும் என அன்புக் கட்டளையிட்டவர் அவர். அப்போது அவரிடம் நான், உமது அன்புக் கட்டளையை நான் ஏற்க வேண்டுமானால்  எனது கோரிக்கையை ஏற்க வேண்டும் எனக்கூறினேன். அவரும் அதை ஏற்பதாக உறுதி அளித்தார்.
அது என்ன தெரியுமா? நான் எனது கருத்துருக்களை உம்மிடம் மட்டுமே வழங்குவேன் எனவும் இக் கருத்துருக்கள் சார்பாக மாவட்ட/ மாநில அலுவலர்கள் யாரையும் நான் தொடர்பு கொள்ள மாட்டேன் எனக் கூறினேன். அதன்படியே விருதுக்கான கருத்துருக்கள் வழங்கிய நாள் முதல் விருதுக்கு தேர்வானோர் பற்றிய அறிவிப்பு வரும் வரையில் நான் மாவட்ட/ மாநிலத் தலைமை இடத்திற்கு செல்லவும் இல்லை, தொலைபேசியில் கூட யாரிடமும் தொடர்புகொள்ளவில்லை.
இதே நிலைதான் நான் சார்ந்த இயக்கத்தின் மாவட்ட/ மாநில பொறுப்பாளர்கள் எவருடனும் இந்த இடைப்பட்ட காலத்தில்   எவ்விதத் தொடர்பும்கொள்ளவில்லை.
ஆனால் றுதி தேர்வுப் பட்டியல் அறிவிப்பிற்கு பின்னர் மாவட்ட அலுவலகங்களுக்கு சென்றபோதுதான் தெரிந்தது எனது அப்பழுக்கற்ற ஆசிரியப் பணிக்கான அங்கீகாரத்தை எனக்கு பெற்றுத்தரும் பணியில் எனக்காக எத்தனைபேர் ஈடுபட்டு இருந்தனர் என அறிய முடிந்தது. அத்தனை பேருக்கும் இன்று எனது நன்றிகள்.
அடுத்து எனக்கு பெற்றோர்களுக்கு நிகராக விளங்கி என்னை வளர்த்தெடுத்த எனது அண்ணார் திரு செ. இராமலிங்கம், அண்ணி திருமதி கு. புஷ்பவல்லி ஆகியோருக்கும், எனது பள்ளிப் பணியில் என்றும் குறுக்கீடு செய்யாது ஒத்துழைத்த எனது மனைவி திருமதி . அகிலாண்டேஸ்வரி, குழந்தைகள் .இரா. பொன்னரசி, .இரா. தென்னரசு ஆகியோருக்கும். எனது நன்றிகள்.
அடுத்து எனது அன்றாடப் பணிகளில் 10 ஆண்டுகால இடைநிலை உதவி ஆசிரியர் பணியில் என்னை செம்மைப்படுத்திய எனது தலைமை ஆசிரியர்கள் திரு . மாரிமுத்து, திரு புலவர் சி. முருகேசன் ஆகியோருக்கும்,  மாவட்டத் தொடக்கக் கல்வித் திட்டத்தில் ஆசிரியப் பயிற்றுனராக 6 ஆண்டு காலம் பணியாற்றியபோது எனக்கு மேற்பார்வையாளர்களாக இருந்து நெறிபடுத்திய திரு க. செல்வராஜ், திரு வெ. முருகேசன் ஆகியோருக்கும் அக்காலகட்டத்தில் மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர்களாய் இருந்து என் பணிக்கு மெருகூட்டிய முந்நாள் பள்ளிக் கல்வி இயக்குநர் முனைவர் திரு ப. மணி அவர்கள் மற்றும் இந்நாள் பள்ளிக் கல்வி இயக்குநர் முனைவர் திரு வி.சி. இராமேஸ்வர முருகன் ஆக்யோருக்கும், கடந்த 12 ஆண்டுகளாய் எனக்கு உதவி ஆசிரியர்களாய் இருந்து எனது பணியில் தொய்வு ஏற்படாமல் என்னோடு தோளோடுதோள் கொடுத்து ஒத்துழைத்தும் எனது பணி மேலும் சிறக்க பல வழிகளிலும் உதவிய திரு எஸ். வேடியப்பன், திருமதி கு. சிலம்புச் செல்வி, திரு தி. பொன்முடி. திரு சி. மணிமாறன், திரு சே. லீலாகிருஷ்ணன், திரு மு. குமரேசன், திரு சி. சிவா, திருமதி க. கவிதா, ப. கேசவர்த்தினி, திருமதி எஸ். தாமரைச்செல்வி, திரு ந. இராஜசூரியன், திரு ப. சரவணன், திருமதி சு. சாரதா, திரு தீ. சிவராமன், திருமதி  வி. கஸ்தூரி மற்றும் தற்போது உதவி ஆசிரியர்களாக இருக்கும் திருமதி மு.இலட்சுமி, திரு இரா. முரளி, திரு வே வஜ்ஜிரவேல், திருமதி அ. நர்மதா ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகள் என்றும் உரியது.
அதேபோல் என்னை பல வளர்ச்சி நிலைகளில் செதுக்கிய எனது முதல் வகுப்பு ஆசிரியர் திருமதி ஜெயலட்சுமி, இரண்டாம் வகுப்பு ஆசிரியர் திருமதி பார்வதி, மூன்றாம் வகுப்பு ஆசிரியர் திரு சு. சிவலிங்கம், நான்காம் வகுப்பு ஆசிரியர் திரு இரத்தினசாமி எனும் பரிசுத்தம், ஐந்தாம் வகுப்பு ஆசிரியர் திரு இல. வேலாண்டி எனும் வேலுச்சாமி, ஆறாம் வகுப்பு ஆசிரியர் திருமதி கு. புஷ்பவல்லி, ஏழாம்வகுப்பு ஆசிரியர் திரு இரா. பழனி, எட்டாம் வகுப்பு ஆசிரியர் திரு முகம்மது ஷெரீப், ஒன்பதாம் வகுப்பு ஆசிரியர் திரு இரா. இராஜமாணிக்கம், பத்தாம் வகுப்பு ஆசிரியர் திரு டி. கற்பகம் ஆகியோருக்கும் எனது ஆசிரியர் பயிற்சிப்பள்ளி ஆசிரியர்கள் திரு எஸ். சச்சிதானந்தம், திருமதி ஜெயலட்சுமி, திரு ஆக தங்கவேலு, திரு டி பி. பழனியப்பன், திரு கோபால் ஆகியோருக்கு எனது மானசீகமான நன்றிகள்.
இறுதியாக எனது பணியில் கடமையையும், உரிமையையும் இருகண்களாக போற்றி செயல்பட்டிட நல்வழிகாட்டி பயிற்சிக்களம் அமைத்துக்கொடுத்த தமிழக ஆசிரியர் கூட்டணியின் அனைத்து மாநில/ மாவட்ட/ வட்டாரப் பொருப்பாளர்களுக்கும் எனது நன்றிகள்.



எமது பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வாழ்த்திய போது

 எமது பள்ளிக்கு நேரடியாக வந்து வாழ்த்து தெரிவித்த  ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் கல்வி  நிறுவனங்களின் நிறுவனர்  திரு வே. சந்திரசேகரன் மற்றும் காரப்பட்டு கிரசண்ட் மெட்ரிக் பள்ளி தாளாளர் திரு நூருல்லா செரீப் 

மாவட்டத்தொடக்கல்வி அலுவலர் திரு இராஜா அவர்கள் வாழ்த்தியபோது

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு மு. இராமசாமி அவர்கள் வாழ்த்தியபோது
அனைவருக்கும் கல்வித் திட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு பொ. குமார் அவர்கள் வாழ்த்தியபோது


விழா நிகழிடத்தில் எனது குடும்பத்தினரோடு


தமிழக ஆசிரியர் கூடணியின் மாநிலத் தலைவர் திரு அ. வின்செண்ட் பால்ராஜ் அவர்கள், பொதுச் செயலாளர் திரு கோ. முருகேசன் அவர்கள், மாநிலப் பொருளாளஎ திரு மா. நம்பிராஜ் அவர்கள் மற்றும் அகில இந்திய ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு அகில இந்திய பொதுச் செயலாளர்  திரு வா அண்ணாமலை அவர்கள்  ஆகியோர் விழா நிகழிடத்திற்கு நேரில் வந்து வாழ்த்து தெரிவித்த போது



 

 
விழாஅரங்கம்




விருது பெற்ற மகிழ்ச்சியில் எனது குடும்பத்தினரோடு