ஊத்தங்கரை ஒன்றியம் கெங்கபிராம்பட்டி குறுவள மையம் சார்பில் 12 பள்ளிகளைச் சேர்ந்த பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான 3 நாள் பயிற்சி முகாம் 24,25.02.2014 மற்றும் 03.03.2014 ஆகிய நாட்களில் நடைபெற்றது.
முன்னதாக பயிற்சி முகாமை மைய ஒருங்கிணைப்பாளரும் ஜோதிநகர் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியருமான செ. இராஜேந்திரன் அவர்கள் துவக்கி வைத்தார். பயிற்சி கருத்தாளராக ஒன்றிய வளமைய ஆசிரியப் பயிற்றுனர் திருமதி வித்யா அவர்கள் கலந்துக்கொண்டார்.