ஒவ்வோர் ஆசிரியருக்கும் தான் பணியாற்றும் பள்ளி ஓர் கோயில்தான். அதன் அடிப்படையிலேயே நான் பணியாற்றும் பள்ளியின் சிறப்பு நிகழ்வுகளைத் தாங்கி வரும் இந்த வலைப்பூ - விற்கு கல்விக் கோயில் எனப் பெயரிட்டுள்ளேன். மேலும் அரசுப் பள்ளியும் கூட தரமான கல்வியையும், சீரிய ஒழுக்கத்தையும் அளிக்கும் பள்ளியே என்பதை உலகிற்கு உணர்த்திடவே இச்சிறிய முயற்சி.
வியாழன், 5 செப்டம்பர், 2024
ஆசிரியர் தினவிழா - 2024
ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (05.09.2024) ஆசிரியர் தினவிழா நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆசிரியர் தினவிழாவில் முன்னதாக பள்ளி உதவி ஆசிரியர் சோ. சிவகுருநாதன் அனைவரையும் வரவேற்று ஆசிரியர் தின வாழ்த்துகளைப் பகிர்ந்துக்கொண்டார்.
தொடர்ந்து பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களை பெருமைப் படுத்தும் வகையில் அவர்களின் சேவைகளை, தமது பேச்சு, கவிதைகள் மூலம் வெளிப்படுத்தினர். உதவி ஆசிரியர்கள் மு. அனிதா, மு. அகிலா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பள்ளித் தலைமை ஆசிரியர் நிகழ்வில் பங்கேற்ற மாணவர்களுக்கும், பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் நினைவுப் பரிசுகளை வழங்கி அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துகளை கூறினார். பின்னர் அவர் தனது உரையில் சமுதாயச் சிற்பிகளான ஆசிரியர்களை சமூகம் கொண்டாட வேண்டும் எனவும், மாணவர் தமது ஆசிரியர்களை என்றும் மறவாது நினைவில் கொண்டு, அவர்கள் கூறும் நற்கருத்துகளை ஏற்று செயல்பட்டால் வாழ்க்கையில் முன்னேறலாம் என்றும் கூறினார். அதன் அடிப்படையிலேயே தான் தலைமை ஆசிரியராகப் பணியேற்ற 2002ஆம் ஆண்டு முதல் தம்மோடு பணியாற்றும் உதவி ஆசிரியர்களை பாராட்டி, வாழ்த்து தெரிவித்துப் பரிசளித்து வருவதாகவும் தெரிவித்தார்.
இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் கோ. ஆனந்தன் அனைவருக்கும் நன்றி கூறினார்.
சனி, 31 ஆகஸ்ட், 2024
பள்ளி மேலாண்மைக் குழு, மறு கட்டமைப்பு - தேர்வுக் கூட்டம்.....
இன்று (31.08.2024) ல் ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு, மறு கட்டமைப்பு - தேர்வுக் கூட்டம் நடைபெற்றது.
பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், முன்னதாக பள்ளியின் உதவி ஆசிரியர் சோ. சிவகுருநாதன் அனைவரையும் வரவேற்றார். பின்னர் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு. செ.இராஜேந்திரன் அவர்கள் இன்றைய கூட்டத்தின் முக்கியமான நோக்கம் பற்றி எடுத்துரைத்தார். அதில் பள்ளி மேலாண்மைக் குழுவின் அமைப்பு, அதன் பணிகள், உறுப்பினர்கள்களின் தகுதி ஆகியவை பற்றி விரிவாக விளக்கி, இன்று புதிதாக தேர்வு செய்யப்பட உள்ள பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் பள்ளியின் மேம்பாட்டுக்காகவும், மாணவர்களின் முன்னேற்றத்திற்காகவும் எவ்வாறெல்லாம் செயல்பட வேண்டும் எனக்கூறி அனைவரும் தம்மை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டி கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து கூட்டத்திற்கு வந்திருந்த பெற்றோர்கள் புதிய தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களை ஒருமனதாக தேர்வு செய்தனர். அதன்படி இப்பள்ளிக்கு திருமதி க. புவணேஸ்வரி தலைமையில் 24 பேர் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களாக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் தேர்வுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
இன்று தேர்வு செய்யப்பட்ட பதிய பள்ளி மேலாண்மைக் குழு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பொறுப்பில் இருக்கும்.
தொடர்ந்து பள்ளித் தலைமை ஆசிரியர் பதவியேற்பு செய்து வைத்தார். தொடர்ந்து அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் பூ. இராம்குமார் அனைவருக்கும் நன்றி கூறினார்.
நிகழ்வுக்கான ஏற்பாடுகளை உதவி ஆசிரியர்கள் கோ. ஆனந்தன், மா.யோகலட்சுமி, மு. அனிதா, கணிணி பயிற்றுநர் மு. அகிலா ஆகியோர் செய்திருந்தனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)