ஒவ்வோர் ஆசிரியருக்கும் தான் பணியாற்றும் பள்ளி ஓர் கோயில்தான். அதன் அடிப்படையிலேயே நான் பணியாற்றும் பள்ளியின் சிறப்பு நிகழ்வுகளைத் தாங்கி வரும் இந்த வலைப்பூ - விற்கு கல்விக் கோயில் எனப் பெயரிட்டுள்ளேன். மேலும் அரசுப் பள்ளியும் கூட தரமான கல்வியையும், சீரிய ஒழுக்கத்தையும் அளிக்கும் பள்ளியே என்பதை உலகிற்கு உணர்த்திடவே இச்சிறிய முயற்சி.
வெள்ளி, 12 ஜனவரி, 2024
பள்ளியில் பொங்கல் விழா 2024......
ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (12.01.2024) தமிழர் திருநாளாம் பொங்கல் விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
முன்னதாக தூய்மை செய்யப்பட்ட பள்ளி வளாகத்தில் பலவண்ணக் கோலங்கள் போடப்பட்டு, மூவர்ண தேசியக்கொடி தலைமை ஆசிரியர் திரு செ இராஜேந்திரன் அவர்களால் ஏற்றப்பட்டு இறை வணக்கக் கூட்டம் நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்கள் அனைவரும் பல வண்ண ஆடைகளில் பட்டாம் பூச்சிகளாய் காட்சி அளித்தனர்.
பின்னர் தமிழர் பாரம்பர்ய முறைப்படி, வட்டாரக் கல்வி அலுவலர்கள் திரு ச.லோகேஷா, ச. இராஜேந்திரன் ஆகியோரால் அடுப்பு மூட்டப்பட்டு இரண்டு புதிய பாணைகளில் பொங்கல் சமைக்கப்பட்டது.
தொடர்ந்து சூரிய வழிபாடு நடத்தப்பட்டு அனைவருக்கும் இனிப்புப் பொ ங்கல் மதிய உணவாக வழங்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து கரும்பு அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது. அதை அனைவரும் பல வட்டங்களாக அமர்ந்து நேர்த்தியாக சாப்பிட்டது பார்ப்பதற்கு மகிழ்ச்சியை உண்டாக்கியது.
நிகழ்வில் வட்டாரக் கல்வி அலுவலர்கள் ச. லோகேஷா, இரா. இராஜேந்திரன், ஆசிரியப் பயிற்றுநர் க. சண்முகம், ஒன்றிய வள மைய கணக்காளர் திருப்பதி, கணினி இயக்குனர் கார்த்தி ஆகியோரும் பெற்றோர்களும், ஆசிரியர்கள் ச மஞ்சுநாதன், வெ. சண்முகம், பூ. இராம்குமார், மா. யோகலட்சுமி, மு. அனிதா, சத்துணவு அமைப்பாளர் பீமன், உதவியாளர் சௌந்தர்யா, பள்ளி மாணவர்கள் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
வெள்ளி, 17 நவம்பர், 2023
மருத்துவ முகாம்......
ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (17.11.2023) பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.
முன்னதாக மருத்துவர் ஜெ. சாய்பிரியா மாணவர்களுக்கு சுகாதாரம் காத்தல், வருமுன் காத்தல், டெங்கு, மலேரியா ஆகியவற்றில் இருந்து காத்துக்கொள்ளுதல் உள்ளிட்ட விழிப்புணர்வு கதுத்துக்களை பகிர்ந்துக்கொண்டு உரையாற்றினார்.
தொடர்ந்து மாணவர்கள் அனைவரையும் தனித்தனியே சோதித்து அவர்களுக்கான மருத்துவ குறிப்புகளையும், தேவையான மருந்து, மாத்திரைகளையும் வழஙகினார். நிகழ்வில் பள்ளித் தலைமை ஆசிரியர் செ. இராஜேந்திரன, உதவி ஆசிரியர்கள் ச. மஞ்சுநாதன், மா. யோகலட்சுமி, பூ.இராம்குமார், மு. அனிதா ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)