வெள்ளி, 17 நவம்பர், 2023

குழந்தைகள் நாள் விழா 2023....

ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று குழந்தைகள் நாள் விழா நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியர் செ. இராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற விழாவில் முன்னதாக உதவி ஆசிரியர் ச. மஞ்சுநாதன் அனைவரையும் வரவேற்றார். பின்னர் உதவி ஆசிரியர்கள் வெ. சண்முகம், மா. யோகலட்சுமி, மு. அனிதா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தொடர்ந்து பேசிய பள்ளித் தலைமை ஆசிரியர் செ. இராஜேந்திரன் அவர்கள் இன்றைய நாளின் சிறப்பு மற்றும் குழந்தைகள் நாள் விழாவுக்கு காரணமான ஜவகர்லால் நேருவின் தியாகம், முதல் இந்தியப் பிரதமராக அவர் ஆற்றிய சாதனைகள் ஆகியவற்றையும், குழந்தைகள் மீது அவர் கொண்டிருந்த அன்பு பற்றியும் விரிவாக எடுத்துக் கூறினார். அதைத் தொடர்ந்து மாணவர்கள் நேரு குறித்து தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பேசினர், அவரைப் பற்றிய கவிதைகள், பாடல்கள் ஆகியவற்றையும் வழங்கினர். அதை தொடர்ந்து ஓவியம், கட்டுரை, பேச்சு, கவிதை, பாடல் ஆகிய போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், அனைத்து மாணவர்களுக்கும் இனிப்பும் வழங்கப்பட்டது. இறுதியாக உதவி ஆசிரியர் பூ. இராம்குமார் அனைவருக்கும் நன்றி கூறினார்.

புதன், 25 அக்டோபர், 2023

பள்ளியில் விஜயதசமி விழா....

ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று விஜயதசமி விழா கொண்டாடப்பட்டது. முன்னதாக பள்ளி வகுப்பறைகள் மற்றும் பள்ளி வளாகம் ஆகியவை தூய்மை செய்யப்பட்டு மங்களப் பொருட்களால் அலங்கரிக்கப்பட்டது. பின்னர் பள்ளி மாணவர்களுக்கான கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள், பள்ளிப் பதிவேடுகள், தளவாடச் சாமான்கள் ஆகியவற்றை வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து மாணவர்கள் அனைவருக்கும் பொறி,கடலை ஆகியன வழங்கப்பட்டது. நிகழ்வில் பள்ளித் தலைமை ஆசிரியர் செ. இராஜேந்திரன், உதவி ஆசிரியர்கள் ச. மஞ்சுநாதன், மா. யோகலட்சுமி, மு. அனிதா ஆகியோரும், மாணவர்களும் கலந்துக்கொண்டனர்.
.