வெள்ளி, 14 ஆகஸ்ட், 2020

கொரோனாக் காலத்தில் பள்ளியில் தோட்ட வேலை மேற்கொண்ட ஆசிரியர்கள்......

 


கொரோனா காலத்தில் ஆசிரியர்கள் யாரும் பள்ளிக்குச் செல்ல வேண்டியது இல்லை என்ற நிலை இருக்கும் போது, ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கடந்த ஒருவார காலமாக மதிய உணவு எடுத்துக்கொண்டு பள்ளிக்குச் சென்று வருகிறார்கள்.  தலைமை ஆசிரியர் செ. இராஜேந்திரன் அவர்களின் வழிகாட்டலின் பேரில் உதவி ஆசிரியர்கள் திருமதி மு. இலட்சுமி, திரு வே. இராஜ்குமார், திரு ஜி.எம் சிவக்குமார் உள்ளிட்ட ஆசிரியர்கள், தினமும் தமது சுய விருப்பத்துடனும், பள்ளியின் எதிர்காக வளர்ச்சியை கருத்தில் கொண்டும் பள்ளிக்குச் சென்று தமது பள்ளியில் புதிதாக பல்வகை மலர்த் தோட்டம், மூலிகைத் தோட்டம், காய்கறித் தோட்டம், அழகுச் செடிகள் தோட்டம் மற்றும் இயற்கை உரம் தயாரிப்பு எனப் பல்வேறு வகையான பள்ளிப் பணிகளை மாணவர்கள் உள்ளிட்ட எவரின் துணையும் இன்றி ஆசிரியர்கள் மட்டுமே மேற்கொண்டு வருகின்றனர். இதில் பல்வகை அழகிய தொட்டிகளில் செடிகளை வைத்தும், பள்ளி வளாகத்தில் உள்ள கடினமான நிலத்தைத் தோண்டி அதில் செடிகள் வைப்பது என பல்வேறு பணிகளை விருப்பத்துடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும் கெங்கபிராம்பட்டி சிற்றூராட்சித் தலைவர் திரு தி. வெங்கடேசன் அவர்களின் ஒத்துழைப்பின் பேரில் ஊராட்சி துப்புரவுப் பணியாளர்களின் உதவியுடன் பள்ளி வளாகம் முழுமையும் இன்று சுத்தம் செய்தனர்.

இதை கண்ட பெற்றோர்களும், ஊர் பொது மக்களும் மிகுந்த மகிழ்ச்சியையும், வாழ்த்துகளையும் பகிர்ந்துக் கொண்டதோடு இக்கல்வி ஆண்டில் அதிக மாணவர்கள் பள்ளியில் புதிதாகச் சேர்வதற்கும் இச் செயல்பாடுகள் துணை புரியும் எனவும் கூறினர்.







































































































புதன், 5 ஆகஸ்ட், 2020

2020 - 21 கல்வியாண்டிற்கான விலையில்லாப் பொருட்கள் வழங்கல்......




           ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (03.08.2020) பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், 2 முதல் 8 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லாப் பொருட்களான பாடநூல்கள், புத்தகப் பை, சீருடைகள், காலணிகள் ஆகியன வழங்கப்பட்டது. மேலும் அனைத்து மாணவர்களுக்கும் தலைமை ஆசிரியரின் சொந்த செலவில் முகக் கவசங்கள் மற்றும் கல்வித் தொலைக்காட்சி நிகழ்வு முறை அட்டைகள் ஆகியனவும் வழங்கப்பட்டது. முன்னதாக அனைத்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு தொடர்பாக பல்வேறு கருத்துக்களையும், தடுப்பு முறைகளையும் தலைமை ஆசிரியர் விளக்கிக் கூறினார். மேலும் இக்காலத்தில் மாணவர்கள் கற்றல் தடைபடாமல் தொடர, தமிழக கல்வித்துறை ஒளிபரப்பும் கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் காணுமாறும் பெற்றோர்கள் இதற்கு உரிய ஒத்துழைப்பு நல்கி மாணவர்களுக்கு வழிகாட்டுமாறும் கேட்டுக்கொண்டார். நிகழ்வில் பள்ளி உதவி ஆசிரியர்கள் திருமதி மு. இலட்சுமி, திரு வே. இராஜ்குமார், திரு ஜி.எம். சிவக்குமார், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திருமதி பெ. மகாலட்சுமி, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் திருமதி கு. ஆனந்தி மற்றும் பெற்றோர்களும், மாணவர்களும் கலந்துகொண்டனர்.